public policy institutes
பொதுக்கொள்கை ஆய்வு நிறுவனங்கள்
தமிழ் விளக்கம்
சமூகப்பொருளாதார அரசியல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து அதன் சாதக பாதகங்களை ஆய்வுக்குட்படுத்தி, அதைப்பற்றிய புரிதலை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசியல் சார்பற்ற, தனியார் நிதி உதவியுடன் செயல்படும் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும். தங்களுடைய ஆய்வு முடிவுகளையும், கருத்துக்களையும் அரசுக்கும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்து செயல்படத் தூண்ட புத்தகங்கள், பத்திரிகைகள், பரப்புரையாளர்கள் என்று பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். சர்வதேச அளவில் புரோக்கிங் நிறுவனம் (Brookings Institution -1916), கார்னிகி அறக்கட்டளை (Carnegie Endowment for International Peace 1910), கட்சன் நிறுவனம் (Hudson Institute -1961), கார்லோ நிறுவனம் (Cato Institute -1977), நகரங்களுக்கான நிறுவனம் (Urban Institute -1968), மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் (Center for Policy Alternatives -1975), கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (Institute for Policy Studies -1963) போன்றவை முக்கியமானதாகும்.
English
Independent and privately funded research and educational organizations established to obtain, inter- pret, and disseminate knowledge about economic, political, and social issues. Many of these organizations publish journals and books, maintain libraries and speakers bureaus, and monitor the decision-making processes of governments and social institutions. Among the larger of these organizations are the Brookings Institution (founded in 1916), the Carnegie Endowment for International Peace (1910), the Hudson Institute (1961), the Cato Institute (1977), the Urban Institute (1968), the Center for Policy Alternatives (1975), and the Institute for Policy Studies (1963).