pulmonary disorders
நுரையீரல் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
நுரையீரல் (Lung) என்பது உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிக்க (மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும்) உதவும் முக்கியமான உடலுறுப்பாகும். நுரையீரலுக்கு மருத்துவத்தில் pulmo என்ற இலத்தீன் வேர்ச் சொல்லைப் பயன்படுத்துவதால் நுரையீரல் தொடர்பான நோய்களை (pulmonarius = 'நுரையீரல் தொடர்பான') pulmonary disorders என்பர். கிரேக்கமொழியில் நுரையீரலை நியுமோ- (pneumo-) என்னும் முன்னொட்டுச் சொல்லால் குறிப்பதால், சுவாசக் கோளாறுகள் pnemonia என்ற பெயராலும் குறிக்கப்படுகிறது வாயுப் பரிமாற்றம் நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சில வேதிப்பொருட்களை செயலிழக்க செய்யும் பணியையும் நுரையீரல் செய்கிறது. நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை (கரியமிலவாயு) வெளியேற்றும் முக்கிய உறுப்பாகச் செயல்படுகிறது. காற்றில் உள்ள ஆக்சிசனை (ஆக்சிசன் = உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை அல்லது கரியமிலவாயுவைப் பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும். ஒரு நாளைக்குச் சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம். நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று, அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் போன்றவை அடங்கும். இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் நுரையீரல் பாதிப்படைந்ததற்கான அறிகுறிகளாகும். நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும். இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.
English
A group of diseases associated with decreased ability to inhale oxygen into the lungs and expel carbon dioxide. Such disorders include bronchial asthma, emphysema, pneumonia, chronic obstructive pulmonary disease, and acute respiratory distress syndrome. These conditions have varying causes, including smoking, injury to the respiratory system, and obstructions of the airways.