punishment
தண்டனை, ஒறுப்பு, தண்டத்தொகை, தண்டவரி
தமிழ் விளக்கம்
1. தண்டனை என்பது ஒருவரின் தவறான நடத்தைக்காக விதிக்கப்படும் அபராதம். எடுத்துக்காட்டாக தவறு செய்த குழந்தைகளைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அடிப்பது, தனிமைப்படுத்தி வைப்பது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை நிறுத்தி வைப்பது போன்ற செயல்கள். 2. சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடுக்கப்படும் சிறைத்தண்டனை, மரண தண்டனை 3. நடத்தை மாற்றுச் சிகிச்சையில் ஒருவரின் நடத்தையை மாற்ற அவருக்கு வெறுப்பை வரவழைக்கும் ஒரு செயலை செய்யச் சொல்வதன் மூலமாகவோ, இல்லை அச்செயலை அவர்முன் செய்துகாட்டுவதன் மூலமாகவோ அச்செயலை அவர் செய்யவிடாமல் தடுப்பது.
English
1. A penalty imposed for misbehavior (for example, a parent spanking, isolating, or withdrawing privileges from a child) or illegal acts (for example, incarceration). 2. In behavior modification, the presentation of an unpleasant or undesired event following a behavior, the consequence of which is that there is decreased probability that the behavior will be repeated.