purchase-of-service (POS) agreements
சேவை பெறுவதற்கான ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் குறிப்பிட்ட அளவு சேவைகளை ஒரு குறிப்பிட்ட கட்டண வரையறைக்குள் பெற்றுக்கொள்வதற்காக சேவை அளிக்கும் நிறுவனத்தோடு செய்துகொள்ளும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவாதமான வருமானமும், அவர்களின் சேவையைத் தொடர்ந்து செய்ய வாய்ப்பும் கிடைக்கிறது. இது மாதிரியான ஒப்பந்தங்கள் பொதுவாக அரசு நிறுவனங்களுக்கும், தனியார் சேவை நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படுகிறது.
English
A fiscal arrangement or contract between two or more organizations; one organization agrees in advance to pay a specified amount to the other for providing a predetermined number of services within a specified time period. Purchaser organizations are thus able to extend services to their clientele, and provider agencies can increase their budgets, extend their services, and in some cases increase their profits. Such agreements are often between government entities as the purchaser and social agencies as providers. This term is also known as purchase of service contracts (POSCs).