Puritanism

தூய்மையாளர், நன்னெறியாளர், அறவாணர், மத ஒழுங்குகளில் நெறி தவறாதவர், பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்

தமிழ் விளக்கம்

17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றி அமெரிக்காவிற்குப் பரவிய புராட்டஸ்டெண்ட் (இங்கிலாந்து திருச்சபை) சீர்திருத்த இயக்கம். இவர்கள் மதச்சடங்குகளில் தீவிரத்தையும், அதைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதமும், கடுமையான ஒழுக்க விதிகளையும், ஒழுக்கமான வாழ்வையும் வற்புறுத்தினர். இவர்களுடைய நெறிமுறைகளின் தாக்கத்தினாலே பிராட்டஸ்டண்ட் நெறிகள் / அறங்கள் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். கடின உழைப்பு, சுய ஒழுக்கம், இன்ப நுகர்ச்சியை தள்ளிவைத்தல் / தாமதப்படுத்துதல், சிக்கன வாழ்க்கை / ஆடம்பரம் தவிர்த்தல் போன்ற நெறிகளைப் பின்பற்றி வாழும்போது அது வாழும் காலத்திலேயே அதிக செல்வத்தையும், சமூக அந்தஸ்தையும், அதிக விடுதலையுணர்வையும் அளித்து இறுதியில் பரலோகத்தின் சொர்க்கவாசல்களைத் திறந்து வைக்குமென்று பிராட்டஸ்டண்ட் மதம் போதித்த அறவிழுமியங்கள். இந்த விழுமியங்கள் பிராட்டஸ்டண்ட் மதத் தலைவர்களான ஜான் கால்வின், மார்ட்டின் லூதர், சார்லஸ் மற்றும் ஜான் வெஸ்லி John Calvin, Martin Luther, Charles and John Wesley) போதனைகளிலிருந்து பெறப்பட்டு, அமெரிக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இது ஒருவகையில் பரலோக சாம்ராஜ்யத்தின் சொர்க்க வாசல் திறக்கப்படவேண்டுமென்றால், தேவாலயத்திற்கு தொடர்ந்து வருதல், பாவங்களை ஒப்படைப்பு செய்தல் மற்றும் மதச்சடங்குகளை நியமமாக, பக்தியுடன் மேற்கொண்டொழுகல் என்று போதித்த கத்தோலிக்க மத போதனைகளுக்கு மாற்றாக கடின உழைப்பு, சுயஒழுக்கம், சிக்கன வாழ்க்கையே சுவர்க்கம் புக போதுமானது என்று போதித்தது. இந்த போதனைகளின் தாக்கம், சமூக, பொருளியல் தளங்களில் மாற்றத்தை உருவாக்கியதென்றும், முதலாளித்துவ எழுச்சிக்கு வித்திட்டதென்றும் சமூகவியாலாளர் மாக்ஸ் வெபேர் தன்னுடைய பிராட்டஸ்டண்ட் அறங்களும், முதலாளித்துவ எழுச்சியும் (Protestant Ethic and the Spirit of Capitalism) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

English

The system of values and beliefs that was prominent in the 17th century, characterized by severe penalties for nonconforming behavior, strict discipline, and controls on what was considered immoral. Much of the Puritan philosophy was implicit in the English poor laws and was imported into colonial America. See also Protestant ethic.