qi-gong psychotic reaction
கீகாங்க் உளத்தடுமாற்றம்
தமிழ் விளக்கம்
கீகாங்க் என்பது உடலையும் மனதையும் மேம்படுத்துவதற்கு உயிர்ச்சக்தியை வெளிப்படுத்த (குண்டலினி) மேற்கொள்ளப்படும் பாரம்பரியச் சீனப் பயிற்சிமுறை. இந்தப் பயிற்சியை, சரியான வழிகாட்டல் இல்லாமல் செய்யும் போது, சிலருக்கு மனத்தடுமாற்றங்களும், தொடர்பறு சீர்கேடு (dissociative disorders), ஞாபக சக்தி / நினைவாற்றல் இழப்பு, விழிப்பு நிலை (உணர்வு, அறிவுடை நிலை, நனவு நிலை) இழத்தல், அடையாளம் (தனித்துவம்) இழத்தல், புலன் உணர்வு (அறியாற்றல்) இழத்தல் போன்றவற்றில் தடங்கல்களோ அல்லது செயலிழப்போ ஏற்படுமென்பது கலாச்சார நம்பிக்கை.
English
A culture bound syndrome, found mostly in China, in which the individual experiences an acute psychotic episode or nonpsychotic dissociative or paranoid reaction, often after intensive involvement in the "exercise of vital energy" practice known as qi-gong.