quack
போலி மருத்துவர்கள்
தமிழ் விளக்கம்
மக்கள் கூடும் சந்தைகளில் தங்களின் புண்ணாற்றும் மருந்துகளைக் கூவி விற்பவர் (hawker of salve) என்ற சொல்லிலிருந்து பிறந்தது quacker என்ற போலி மருத்துவம் என்ற சொல். முறையான பயிற்சியற்றுப் பெற்ற போலியான மருத்துவ அறிவைக் கொண்டு, நோய்தீர்க்கும் ஆற்றல் இருப்பதாகப் பாசாங்கு செய்து சிகிச்சையளிக்கும் போலி மருத்துவர்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் ஐயப்பாட்டிற்குரிய நோயறிமுறைகளையும், மாற்று மருத்துவ முறைகள் என்ற பெயரில் ஐயப்பாட்டிற்குரிய சிகிச்சை முறைகளையும் கையாள்வது மட்டுமல்ல, தங்களின் சிகிச்சை முறைகளின் சிறப்பை தம்பட்டமடித்து விளம்பரப்படுத்தவும் செய்வார்கள். போலி மருத்துவம் பாரம்பரிய, மரபு மருத்துவத்திலிருந்து வேறுபட்டது.
English
A term of disparagement, applied to some medical professionals and to unqualified persons who fraudulently provide medical care.