quality assurance
தர உத்தரவாதம்
தமிழ் விளக்கம்
வியாபாரம், பொறியியல், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தரம் எனப்படுவது 'மேன்மை' அல்லது 'கீழ்நிலைக்குச் செல்லாமை' என்று பொருள்படும். ஒரு பொருள் அல்லது சேவை என்பது கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள் இருப்பதைத் (Specification limits) தரம் என்று சொல்லலாம். உபயோகிப்பவரின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால், அதாவது அதன் 'நோக்கத்திற்குப் பொருத்தமுடையதாக இருந்தால் அதைத் தரமானது என்று சொல்லலாம். தரம் என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக வரையறுக்கப்பட்டாலும், தரம் என்பதன் முதல் அர்த்தம் அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும். It should be fit for use. ஒரு பொருள் அல்லது சேவையின் நிர்ணயிக்கப்பட்ட பணி நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதன் தோற்றம், அது கொடுக்கப்படும் விதம், சேவை, அதன் விலை, (appearance, packing, service, reliability, price), நம்பகத்தன்மை போன்ற விஷயங்கள் ஒரு பொருளின் தரத்தை நிர்ணயம் செய்யும். பலவகையான தரச் சான்றிதழ்கள் நடைமுறையில் உள்ளன. (ISI, ISO), பொருளுக்குக் கொடுக்கப்படும் தரச்சான்று, பொருளுற்பத்தி முறைக்கு கொடுக்கப்படும் தரச் சான்று, உற்பத்தி முறைக்கும் சூழல் இணக்கமுடமைக்கும் கொடுக்கப்படும் தரச் சான்று என்று பல வகையான தர நிர்ணய முறைகள் உள்ளன. இவையெல்லாம் சீரான தரமிக்க பொருட்களை, சேவைகளை வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தில் தயாரித்து, எதிர்பார்க்கும் விலையில் / கட்டணத்தில், பொருட்களையும் சேவைகளையும் குறித்த நேரத்தில் வழங்கவும், விற்பனைக்குப் பின்னும் சேவையைத் தொடரவும், நிர்வாக முறைகளில் ஒழுங்கமைவு கையாளப்படுகிறது போன்ற உத்தரவாதங்களைத் தரம் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பதுமுண்டு.
சமூகப்பணியில் தரம் என்பது, ஒரு சமூகப்பணியாளர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளாரா என்பதிலிருந்து தொடங்கி, அவர் முறையான கண்காணிப்பில் அடிப்படைப் பயிற்சி பெற்றுள்ளாரா, தேவையான தகுதிச் சான்றிதழ்கள் பெற்றுள்ளாரா, அவர் திறன் மேம்பாட்டுத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ளாரா, அவர் தொடர்ந்து தன் அறிவை மேம்படுத்திக்கொள்ள முனைந்துள்ளாரா போன்ற பல கேள்விகளுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதம் ஆகும். மேலும் சமூகப்பணியின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தொழில் நெறிகள் (code of ethics), திறத் தொழில் தடைகள் (professional sanctions), சரியினையானவர்களைக்கொண்டு செய்யப்படும் திறனாய்வு (peer review, utilization review) போன்ற பல நடைமுறைகள் சமூகப்பணியில் தரக்கட்டுப்பாட்டை உறுதிசெய்யப் பின்பற்றப்படும் நடைமுறைகளாகும்.

English
The processes and measures an organization takes to determine that its products or services measure up to the standards established for them. This determination may be accomplished by having supervisors, peers, consumer advocates, or legally designated overseers inspect the work, review the description of the work, or evaluate the system for produc- ing the work. Products or services that fail to meet standards may be rejected, proce- dures for their completion may be revised, and sanctions can be brought against the provider. Quality assurance measures used for social workers include the following: sufficient education from accredited schools of social work, entry-level work experience under qualified supervision, licensing and certification, competency examinations, and continuing education requirements. For the profession, measures include a professional code of ethics that is accessible to the public, peer review, utilization review, quality assurance programs in social work program evaluations, professional sanctions, civil malpractice suits, and criminal negligence charges. Quality assurance programs tend to be more concerned with compliance than with client outcome. This term is synonymous with quality control.