quality assurance programs in social work
சமூகப்பணியில் தர நிர்ணயத்திற்கான திட்டங்கள்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில், ஒரு சேவை எப்படி வழங்கப்பட வேண்டுமென்பதற்காக, வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட, தரஅளவுகோள்களை சமூகப்பணியாளர்கள் பின்பற்றுகிறார்களா என்பதைத் தீர்மானிக்க உதவும் நடைமுறைகளைச் சமூகப்பணி தரநிர்ணயித்திற்கான நடைமுறைகள் எனலாம். இந்த நடைமுறைகள் கீழே கண்டவாறு பின்பற்றப்படுகின்றன. 1. வாடிக்கையாளரின் உடல்சார் மற்றும் சமூகப் பின்னணி, வாடிக்கையாளரின் பிரச்சனைகள், அவருடைய அபிலாட்சைகள், எம்மாதிரியான சேவைகளை இதுவரை பெற்றிருக்கின்றார் அதன் விளைவுகள் என்ன என்பது பற்றிய முழுமையான பணி சார்ந்த தகவல் தொகுப்பு. இந்தத் தகவல் அடிப்படையில் 2. வாடிக்கையாளருடன் சமூகப்பணியாளர் ஏற்படுத்திக்கொண்ட முதல் தொடர்பு, அதையொட்டி வாடிக்கையாளரைப்பற்றிய மதிப்பீடு, வாடிக்கையாளருக்குச் செய்ய நினைத்த உதவி (சிகிச்சை) மற்றும் அதன் நோக்கங்கள், உதவி செய்ய கையாளப்பட வழிமுறைகள், உதவியினால் விளைந்த பயன்கள், உதவியை (சிகிச்சையை) முடித்தகொண்ட விதம் (termination) போன்ற நடைமுறைகளை சரியினையான வேறொரு சமூகப்பணியாளரின் பரிசீலனைக்கு உட்படுத்தி அவரின் கருத்தறிதல், 3. சரியினையானவர்களின் பரிசீலனை அல்லது கருத்துக்கணிப்பிலிருந்து, உதவி அல்லது சிகிச்சை எந்தத் தரத்துடன் வழங்கப்பட்டது, அது சரியான முறையில் வழங்கபபடாதிருக்கும் பட்சத்தில் அதை எப்படியெல்லாம் செம்மையாகச் செய்திருக்கலாம், வாடிக்கையாளருக்குக் கிடைத்த பலன்கள் பற்றிய பரிசீலனை. இந்த மூன்று நடைமுறைகளைப் பின்பற்றுவதென்பது சமூகப்பணி சேவை வழங்குதலில் தர நிர்ணயத்தை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் பொதுவான நடவடிக்கைகள்.
English
Those measures taken by the social work profession to determine and demonstrate that its practitioners meet the standards that have been made explicit. These programs contain one or more of the following components: a patient or client information system (which tends to record physical and social characteristics of the client, problems or goals, and services received and outcomes), a peer review system (which evaluates the social worker's initial contact, assessment, formulation of goals, actual intervention, and termination and outcomes), and various systems for assuring that social work coverage is available. In the process, reviewers outline the standards of care, evaluate cases to determine if standards are being met, make recommendations for improvements, and have a follow-up review to see if improvements were achieved. See also quality improvement teams (QITS).