quality circles
தர வட்டங்கள், தரக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
தர வட்டம் (Quality Circle) என்பது ஓரிடத்தில் ஒரே மாதிரியான பணியைச் செய்யும் பணியாளர்கள் (ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை) தாமாகவே முன்வந்து, வாரத்தில் ஒரு நாள் கூடித் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து, அதைப் பற்றி ஆலோசனை செய்து, தீர்வுகளைக் கண்டறிய வழிமுறைகளைக் கையாள உதவும் அமைப்பு ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முழுத்தர மேலாண்மை என்ற கோட்பாட்டின் ஒரு அங்கமாகத் தர வட்டம் விளங்குகிறது. பணி செய்யும் இடத்தில் தாங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, தங்களின் ஆலோசனைகள் கேட்கப்படுகிறது என்ற மன நிறைவு பணியாளர்களுக்கு உருவாகும் பட்சத்தில், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரமும் சரியாக இருக்கும் என்பதே இதன் அடிப்படை ஆகும். தாமாகவே முன்வருதல், ஒன்றுகூடிப் பணி செய்தல், தவறுக்கு யார் காரணம் என்று நோக்காமல், எது காரணம் என்று ஆராயும் குறைகூறாத பண்பு, சுயநலத்தை நீக்கி பொது நலனில் அக்கறைகொள்ளல் போன்ற உணர்வை பணியாளரிடம் வளர்ப்பதின் மூலம் ஒரு தொழிலகத்தின் உற்பத்தித் தரத்தையும், சமுதாயத் தரத்தையும் மேம்படுத்தலாம் என்பது இதன் நம்பிக்கை. மேம்பட்ட சமுதாயம், மேம்பட்ட பணியாளர்களை உருவாக்கும். மேம்பட்ட பணியாளர்கள் மேம்பட்ட தரமான பொருட்களை உருவாக்குவார்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது தர வட்டம்.
English
In organizational management, a procedure in which a small number of employee volunteers, usually six to 12 people from the same work area, meet regularly to discuss positive ways to solve problems. The organization usually provides advance training in decision making for these volunteers, but they have no direct decision-making power. Quality circles are considered effective alternatives to the anonymous "suggestion box" method of gaining new insights from the employees perspective. This approach has been developed and used more in Japan and other nations than in the United States and in commercial industries more than in human services agencies.