quality control
தரக்கட்டுப்பாடு
தமிழ் விளக்கம்
பார்க்க: quality assurance - வியாபாரம், பொறியியல், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தரம் எனப்படுவது 'மேன்மை' அல்லது 'கீழ்நிலைக்குச் செல்லாமை' என்பதாகும். ஒரு பொருள் அல்லது சேவை என்பது கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள் இருப்பதைத் (Specification limits ) தரம் என்று சொல்லலாம். உபயோகிப்பவரின் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் அந்தப் பொருளுக்கோ சேவைக்கோ இருநதால், அதாவது அதன் 'நோக்கத்திற்குப் பொருத்தமுடையதாக இருந்தால் அதைத் தரமானது என்று சொல்லலாம். தரம் என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக வரையறுக்கப்பட்டாலும், தரம் என்பதன் முதல் அர்த்தம், அது உபயோகிகப்படக் கூடியதாய் இருக்க வேண்டும். It should be fit for use. ஒரு பொருள் அல்லது சேவையின் நிர்ணயிக்கப்பட்ட பணி நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதன் தோற்றம், அது கொடுக்கப்படும் விதம், சேவை, அதன் விலை, (appearance, packing, service, reliability, price) நம்பகத்தன்மை போன்ற விஷயங்கள், ஒரு பொருளின் தரத்தை நிர்ணயம் செய்யும். பலவகையான தரச் சான்றிதழ்கள் நடைமுறையில் உள்ளன. (ISI, ISO), பொருளுக்கு கொடுக்கப்படும் தரச் சான்று, பொருளுற்பத்தி முறைக்கு கொடுக்கப்படும் தரச் சான்று, உற்பத்தி முறைக்கும் சூழல் இணக்கமுடமைக்கும் கொடுக்கப்படும் தரச் சான்று என்று பல வகையான முறைகள் உள்ளன. இவையெல்லாம் சீரான தரமிக்க பொருட்களை, சேவைகளை வாடிக்கையாளருக்கு வழங்க, பொருட்களையும் சேவைகளையும் குறித்த நேரத்தில், எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்பார்க்கும் விலையில், கட்டணத்தில் வழங்க, விற்பனைக்குப் பின்னும் சேவையை வழங்க, நிர்வாக முறைகளில் ஒழுங்கின்மையைக் கையாளப்படுகிறது போன்ற உத்தரவாதங்களைத் தரம் என்ற ஒரு சொல்லால் குறிக்கலாம்.
சமூகப்பணியில் தரம் என்பது ஒரு சமூகப்பணியாளர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளதற்கும், முறையான கண்காணிப்பில் அடிப்படைப் பயிற்சி பெற்றுள்ளதற்கும், தேவையான தகுதிச் சான்றிதழ்கள் பெற்றுள்ளதற்கும், திறன் மேம்பாட்டுத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்துள்ளதற்கும், அவர் தொடர்ந்து தன் அறிவை மேம்படுத்திக்கொள்ள முனைந்துள்ளதற்கும், கொடுக்கப்படும் உத்தரவாதம் ஆகும். மேலும் சமூகப்பணியின் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தொழில் நெறிகள் (code of ethics), திறத் தொழில் தடைகள் (professional sanctions), சரியினையானவர்களைக் கொண்டு செய்யப்படும் திறனாய்வு (peer review, utilization review) போன்ற பலநடைமுறைகள் சமூகப்பணியில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யப் பின்பற்றப்படும் நடைமுறைகளாகும்.

English
See quality assurance.