questioning

கேள்வி கேட்டல், வினாவுதல், ஐயுறுதல்

தமிழ் விளக்கம்

கேள்விகேட்பதென்பது, ஒரு வாடிக்கையாளருடனான சந்திப்பின் போது, அவரைப் பற்றித் தகவல் அறியவும், அவருடைய கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த உதவவும் சமூகப்பணியாளர் மேற்கொள்ளும் உரையாடல் முறை. சமூகப்பணியாளர் கேள்விகேட்கும் முறையே, ஒரு வாடிக்கையாளர் தன்னைப்பற்றிப் புரிந்துகொள்ளவும், தன்னைப்பற்றிய உள்ளொளி பெறவும், புதியதைத் தெரிந்து கொள்ளவும் உதவுவது மட்டுமல்ல, சமூகப்பணியாளர் வாடிக்கையாளர் உறவைக் கட்டமைத்து, வாடிக்கையாளர் செல்லவேண்டிய திசையையும் காட்டவல்லது. வாடிக்கையாளர் பின்னணி, அவருடைய பிரச்சனை, அவர் அடைய நினைத்திருக்கும் உடனடி மற்றும் நீண்ட கால இலக்குகளை மையமாகக் கொண்டு கேள்வி கேட்கும் (உரையாடல்) முறையும் மாறுபடும்.

English

A primary tool in the social work interview, the procedure in which the worker systematically requests from the client information, feedback, and emotional expression. The social worker's questioning process gives focus and direction to the client and to the working relationship and is a medium through which the client develops self-understanding and learns new skills and insights. Questioning takes many forms, depending on the immediate and long-term goals of the interview.