questionnaire
கேள்வித்தாள்
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனை அல்லது ஆய்வுத்தலைப்பு தொடர்புடைய செய்திகளையோ அல்லது கருத்துக்களையோ முறையாகச் சேகரிக்க சமூகப்பணியாளரோ அல்லது ஆய்வாளரோ பயன்படுத்தும் கேள்விப்பட்டியல் அல்லது வினாக்கொத்துக் கருவி. இது தகவல்களை இலகுவாக திரட்டிக் கொள்வதற்குரிய எளிமையான சாதனமாகவும், ஆய்வாளர்களுக்கு நேரச்சிக்கனத்தைத் தரும் சாதனமாகவும் உள்ளது. தகவல் தருவோர் தாம் யார் என்று தெரிவிக்காத வகையில் துலங்கலைத் தருகின்ற சாத்தியக் கூறுகளும் இதிலே காணப்படுகின்றன. தகவல் தருவோரின் நேர்மியப்பண்பு, கருத்துறுதித் தன்மை, அதனை ஒரு பொறுப்பு மிக்க செயலாகக் கருதும் மனப்பக்குவம் முதலியவை வெற்றியைத் தரும். இதற்கு வினாக்களை எளிதானதாகவும், சிக்கலற்றதாயும், வினாக்கள் பிரதியடிப்பு (repetition) கொண்டிராதும், வினாக்கள் நன்கு வகை பிரிக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் அமைத்தல் வேண்டும். குறுகிய நேரத்திற்குள் விடையளிக்கக் கூடியதாகவும், விடைகள் நம்பகரமானதாக இருக்கின்றதா என்பதைக் கண்டடையக் கூடியவாறு குறுக்குப் பிடிகளையும், விடை தருபவரை திணறடிக்க வைக்காது, ஈடுபாட்டுடன் இசைவு தர வைக்கும் பண்புடனும் வினாக்கொத்து வடிவமைப்பக்கப்பட வேண்டும். ஆய்விலே தனக்கு ஒரு பங்கு உண்டு என்ற உணர்வை விடைதருபவர் மனதில் ஏற்படுத்துதல் விரும்பத்தக்கது. முன் கூட்டியே பரீட்சிக்கப்பட்ட வினாக்களைப் (pretested questionnaire) பயன்படுத்துதல் வினாக்கொத்து அமைப்பதற்குத் துணையாக இருக்கும். வினாக்கொத்தை திருத்தமாக வடிவமைப்பதற்கும் தகவல்களைச் செப்பமாகச் செய்வதற்கும் அது கைகொடுக்கும். ஒரே வினாக்கொத்தை சிறிது மாற்றங்களுடன் ஒருவருக்கு மீளக் கொடுத்து இசைவுதலின் (responding) நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் முறையையும் ஆய்வாளர் பயன்படுத்தலாம். வினாக்கொத்து அணுகுமுறையில் விடைதருவோரின் மாறும் மனக் கோலங்கள் தாக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மனங் கொள்ளல் வேண்டும்.
பார்க்க :
Close ended questionnaire - கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமளிக்காமல் துல்லியமான பதில்களைப் பெறஉதவும் கேள்விகள் - ஒரு வாடிக்கையாளர் / பேட்டி அளிப்பவர் உள்ளது உள்ளவாறான, சுருக்கமாக, கற்பனை கலவாமலும், தன்னுடைய அபிப்பிராயத்தைக் கலவாமலும் பதில் சொல்லும்படியாக கேள்விகளை வடிவமைப்பது. பேட்டிக்கான கால அவகாசம் குறைவாக இருக்கும்போது, தேவையற்ற செய்திகளை இடையில் கூறும் போக்கைத் தவிர்க்கவும், மழுப்பலான பதில்களைக் கூறவிடாமலும், பொருத்தமில்லா தகவல்களைக் கூறவிடாமலும் கேட்கப்படும் கேள்விகள். இப்படிக்கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றைவார்த்தையில் பதிலைப் பெறுவதாக அமையும்.
Open ended questionnaire - வெளிப்படையான கருத்துக்களைப் பெற உதவும் கேள்விகள், கருத்துத் திறப்பிற்கு உதவும் கேள்விகள் - சமூகப்பணியிலும் பிற கருத்துக்கணிப்பு ஆய்வுகளிலும் பதிலளிப்பவர் தான் விரும்பும் வகையில் தன் கருத்துக்களைத் தெரிவிக்க வழிசெய்யும் கேள்வி முறை. இது கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமாளிக்காமல் துல்லியமான பதில்களைப் பெறஉதவும் கேள்வி முறையிலிருந்து (close ended questions) மாறுபட்டது. உதாரணமாக மேலதிகாரியுடன் இணக்கமாக நடந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்பதைவிட, மேலதிகாரியுடன் உங்களால் இணக்கமாக நடந்துகொள்ள முடியாமை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கும் போது, பதிலளிப்பவர் தன்னுடைய கருத்தைச் சொல்ல வாய்ப்பேற்படும். ஆய்வு நோக்கம் பொறுத்து இரண்டு வகையான கேள்விமுறைகளும் முக்கியத்துவம் கொண்டதாகவே கருதப்படுகிறது.

English
A set of written questions seeking specific facts or subjective opinions on a given subject, used by social work interviewers and researchers to guide and systematize the information being gathered. Questionnaires may be so highly structured that they can be self- administered by the client, who merely gives yes-no responses. Or they can be relatively unstructured, consisting of a list of subjects that remind the investigator to ask relevant questions.