questions, open-ended

Open ended questionnaire

தமிழ் விளக்கம்

வெளிப்படையான கருத்துக்களைப் பெற உதவும் கேள்விகள், கருத்துத் திறப்பிற்கு உதவும் கேள்விகள் - சமூகப்பணியிலும் பிற கருத்துக்கணிப்பு ஆய்வுகளிலும் பதிலளிப்பவர் தான் விரும்பும் வகையில் தன் கருத்துக்களைத் தெரிவிக்க வழிசெய்யும் கேள்வி முறை. இது கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமாளிக்காமல் துல்லியமான பதில்களைப் பெறஉதவும் கேள்வி முறையிலிருந்து (close ended questions) மாறுபட்டது. உதாரணமாக மேலதிகாரியுடன் இணக்கமாக நடந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்பதைவிட, மேலதிகாரியுடன் உங்களால் இணக்கமாக நடந்துகொள்ள முடியாமையை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்கும் போது பதிலளிப்பவர் தன்னுடைய கருத்தைச் சொல்ல வாய்ப்பேற்படும். ஆய்வு நோக்கம் பொறுத்து இரண்டு வகையான கேள்விமுறைகளும் முக்கியத்துவம் கொண்டதாகவே கருதப்படுகிறது.

English

See open-ended questions.