quick relaxation techniques

விரைவாகத் தளர்வுரல் / இளைப்பாறுதல் / ஓய்வெடுத்தல் / ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நுட்பங்கள்

தமிழ் விளக்கம்

மனப்பதட்டத்தைக் குறைக்கவும், மனதை அமைதியாக்கவும் சுயமாகச் செய்துகொள்ளும் எளிமையான பயிற்சிகளை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நுட்பங்கள் எனலாம். இதில் பலமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 1. பின்னோக்கி எண்ணுதல் (countdown - அமைதியாக உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு எண்களைப் பின்னோக்கி எண்ணுவது) 2. உளக்காட்சிப்படுத்தல் (imagery - அழகான பொருட்களையோ அல்லது மனதை மகிழ்வித்த சம்பவங்களையோ மனதில் நினைத்துப் பார்ப்பது) 3. கூர்மாசனம் (turtile pose - நேராக உட்கார்ந்து கொண்டு, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மெதுவாக அசைத்து மூச்சுவிடுதல் 4. உடல்கட்டு அலகீடு அல்லது உறுப்புகளை வரிசையாகப் பார்த்தல் (scanning - நேராக உட்கார்ந்துகொண்டு மெதுவாக மூச்சு விட்டு உடலின் ஒவ்வொரு பாகமும் ஓய்வெடுப்பதாக எண்ணல்). மகரிஷி மகேஷ் யோகி பரிந்துரைத்த ஆழ்நிலைத் தியானப் பயிற்சி (Transcendental Meditatation) உடலையும் மனதையும் ஓய்வுறச் செய்து, புத்துணர்வு அளிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

English

Simple self-administered methods for achieving a state of greater calm and reduced stress. Four techniques are (1) the countdown (sitting quietly, eyes closed, counting numbers or imaginary objects); (2) imagery (imaging beautiful scenes or pleasurable remembrances); (3) the turtle (the yoga-inspired practice of sitting straight, letting the chin fall to the chest and exhaling, inhaling while moving the head back as though trying to touch the shoulders, then pulling shoulders up as though trying to touch the ears); and (4) scanning (while sitting during normal daily activities, inhaling slowly while thinking about each muscle group in the body and purposefully relaxing all the muscles that are tense).