quota system
குறிப்பிட்ட விகிதப் பங்கீடு முறை
தமிழ் விளக்கம்
இது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு நடைமுறை (Reservation Policy) போன்றும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாகுபாடு சமத்துவமின்மைக்கு எதிரான உறுதியான நடவடிக்கை (Affirmative Action) போன்று மேலோட்டாமாகப் பொருள்தந்தாலும், அதிலிருந்து சற்று வேறுபட்டது. இது அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேரை ஒன்றில் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்ற நிர்வாக, சமூகக் கொள்கை அல்லது சட்ட நடைமுறையாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக எந்த நாட்டினர், எந்த எண்ணிக்கையில், அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கலாம் என்ற நடைமுறை. சில நேரங்களில் இது உறுதிப்படுத்தப்பட்ட நடைமுறையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதனுடைய அமலாக்கம் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக அமெரிக்க நகரங்களில் சில, அங்கிருக்கும் கருப்பினத்தவரின் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளூர் காவல் நிலையங்களில் 1 லிருந்து 50 சதவீதம் கருப்பினத்தவரைக் காவலர்களாக நியமிக்கும் நடைமுறை.
ஆனால் இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதாரச் சூழல், உடல் ஊனமுற்றவர் என்ற அடிப்படையில் சிலருக்கு வரலாற்று ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். பெண்களுக்கும் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, பின் தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் புதிய பொருளாதார / வணிக வளர்ச்சியுற்ற காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறாமல் இழக்க நேரிடுகிறது. இதைச் சரிசெய்யவும், சில நாடுகளில் இனப் பேராதிக்கத்தினால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பாகுபாடு சமத்துவமின்மைக்கு எதிரான உறுதியான நடவடிக்கை (Affirmative Action) எனப்படுகிறது.

English
An organizational plan, social policy, or legal doctrine that specifies how many or what proportion of people of an identified status will be included in an identified group. The system may be designed to exclude people (as in some past U.S. immigration laws that permitted a higher number of Europeans than Africans or Asians to enter the country) or include people (as in some affirmative action programs). For example, a city may decide that half its police officers should be African American to reflect the population and overcome past discriminatory policies, so it mandates that efforts will be made to reach the 50-50 quota.