race

இனம், வம்சம், குலம், சமசாதி, பொதுமரபில் இணைந்த குழு, மூலக் குடிமரபுக்குழு, வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, மனித இனம், உயிரினம், .பந்தயம், போட்டி, விரைவேகப் போக்கு

தமிழ் விளக்கம்

இனம் என்ற ஆங்கில வார்த்தையான race என்ற சொல், அரபியச் சொல்லான 'ras' 'رأس' மனிதத் தலைகளின் வடிவைக் குறிக்கும் சொல்லிருந்து பிறந்தது. இது இத்தாலிய மொழியில் razza என்று திரிபடைந்து, ஆங்கிலத்தில் race என்றானது என்று சொல்வர். Race என்ற ஆங்கிலச் சொல் பலபொருட்களில் பயன்படுத்தப்பட்டாலும், சமூகவியலில் அது இனம் என்ற பொருளில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடனிருக்கும் மக்கட்கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். இனம் என்பது மரபு வழியாகப் பெற்ற கூறுகளின் அடிப்படையில் மக்களை வகைப்படுத்த உபயோகிக்கப்படும் சொல்லாடல். மனிதர்களின் தோற்றத்தைக் கொண்டும் (phenotype), மூலக் குடிமரபு அல்லது வம்சாவளியைக் கொண்டும் (ancestry), பொதுப்பண்புகளைக் கொண்டும் (ethinic) மனிதர்களை வகைப்படுத்தும் சமூக நடைமுறையை இனம் என்ற சொல்லால் குறிப்பர். மனித இனங்களை வகைப்படுத்த பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. 1. தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தும் முறை. மஞ்சள் நிறமுடைய மங்கோலிய வகையினம் (Mongoloid), வெள்ளை நிறமுடைய ஐரோப்பிய வகையினம் (Caucasian), கருப்பு நிறமுடைய ஆப்ரிக்க வகையினம் (Negroid) 2. வாழுமிடத்தை அல்லது பூகோளப்பரப்பை அடிப்படையாகப் வைத்து வகைப்படுத்தும் ஆப்ரிக்கர், அமெரிக்க இந்தியர், ஆசியர்கள், ஆஸ்திரேலியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியர்கள், மெலனீசியர்கள், மைக்ரோனீசியர்கள், பாலினீசியர்கள் போன்ற நடைமுறை. 3. மரபு ரீதியாக அல்லாமல் பண்பாட்டு மற்றும் கலாச்சார ரீதியாகப் பழங்குடி மரபு, குடும்ப மரபு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கும் நடைமுறை. இனங்கள் அரசியலோடு இணைக்கப்பட்டு, சில இனங்களை உயர்வானவையாகவும், சில இனங்களைத் தாழ்ந்தவையாகவும் (``விரைவாக வளர்ச்சி அடைந்த’’, ``உயர்ந்த’’ இனங்கள் ``பின்தங்கி விட்ட’’, ``தாழ்ந்த’’ இனங்கள்') காட்டும் போக்கும் உள்ளது. சில நாடுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கும், பின்தங்கிய மக்கள் குழுக்களுக்கு சலுகைகள் வழங்கவும், சில மக்கள் குழுக்களின் மீது காட்டப்படும் பாரபட்ச மனோபாவத்தைக் கட்டுக்குள் வைக்கவும், சில குழுக்களின் தனித்துவமான கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கவுமென்று பல குறிக்கோள்களின் அடிப்படையில் மக்கள் இனங்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்..

English

The major subdivisions of the human species whose distinguishing characteristics are genetically transmitted. Races are divided in myriad ways, including the three traditional groups (Negroid, Mongoloid, and Caucasian); the "geographical races" (African, American Indian, Asian, Australian Aborigine, European, Indian, Melanesian, Micronesian, and Polynesian); and the groupings of various national ancestries, tribes, and even families. Many characteristics by which people seek to distinguish racial groups are not genetically transmitted but culturally learned. The U.S. government through various entities has recognized specific groups of people as composing a racial group, at least for purposes of legal protection. For example, the U.S. Supreme Court has held that people of Arabian ancestry and Jewish ancestry are to be protected from racial discrimination. For reporting purposes, the Equal Employment Opportunity Commission (EEO C) delineates many race categories including white, not of Hispanic origin; Hispanic (people of Latin and South American and Spanish cultural origin, regardless of race); African; American Indian or Alaska Native; Asian and Pacific Islander.