radical social work

தீவிர சமூகப்பணி, முற்போக்கு சமூகப்பணி, அடிப்படை மாற்றம் விழையும் சமூகப்பணி, சமூக மாற்றத்திற்கான சமூகப்பணி

தமிழ் விளக்கம்

வறியவர்களையும், வாய்ப்பற்றவர்களையும் மேலும் வறியவர்களாக, எளிதில பாதிக்கப்படக்கூடியவர்களாக உருவாக்கும் நிறுவன, கலாச்சார, சமூக, பொருளாதார நடைமுறைகளிலுள்ள அநீதிகளைக் களைவதில் கவனம் செலுத்தும் சமூகப்பணி அணுகுமுறை. முற்போக்கு சமூகப்பணியாளர்கள், பிரச்சனைகளைத் தனித்தனியாகத் தீர்க்க விரும்பாமல், பெரும்பாலான மக்களை, குறிப்பாக ஏழைகளைப் பாதிக்கும் சமூக நிறுவனங்களின் அடக்குமுறைகளை, தங்களின் சமூக அரசியல் செயல்பாடுகளின் மூலமாகக் கேள்விக்குட்படுத்தி, மக்களைத் திரட்டி அடிப்படை மாற்றங்களுக்காக முயல்கின்றனர். சமூக மாற்றத்தை முன்னெடுப்பதில், முற்போக்கு சமூகப்பணியாளர்களே, சமூகப்பணி வரலாறு நெடுக முனைந்து வந்துள்ளார்கள். முற்போக்கு சமூகப்பணியாளர்களின் சிந்தனைப் போக்கையும், செயல்பாட்டு முறைகளையும் 'சமூகப்பணி இன்று' (Social Work Today), 'வினையூக்கி - பொதுவுடமை நோக்கில் சமூக சேவைகள்' (Catalyst: A Socialist Journal of the Social Services), 'முற்போக்கான மனித சேவை' (Journal of Progressive Human Services) போன்ற பத்திரிகைகளின் எழுத்துக்களிலிருந்து அறியலாம்
பார்க்க: Bertha Capen Reynolds Society (BCRS) - பெர்தா கேபன் ரெனால்ட்ஸ் நிறுவனம் -

English

The ideology among some social workers that the most effective way to achieve goals of equality and solutions to social problems is to eliminate or make major changes in existing institutions. Radical social work, which is now mostly referred to as progressive social work, includes techniques for peaceably bringing about these changes, including passive resistance, demonstration, strikes, and political and social activism. See also Bertha Capen Reynolds Society (BCRS).