Ragged School Movement

ஏழைக்ளுக்கான / வலுவிழந்தவர்களுக்கான / வாய்ப்பற்றவர்களுக்கான பள்ளி இயக்கம்

தமிழ் விளக்கம்

ஏழை மற்றும் பள்ளி செல்ல வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும், அவர்களின் சமூக மேம்பாட்டிற்காகவும் ஷாஃப்டெஸ்புரி பிரபுவால், 1850 களில் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி இயக்கம். இது ஜான் பவுண்ட்ஸ் (John Pounds 1766-1839) என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியால் தொடங்கப்பட்டு, ஷாஃப்டெஸ்புரி பிரபுவால் இங்கிலாந்து முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தப் பள்ளிகள் தன்னார்வத் தொண்டர்களால் நிருவகிக்கப்பட்டு, கல்வி, சமூக சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கியது. கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியான சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் அதிகரித்த பின், இந்த இயக்கம் ஏழை மற்றும் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினருக்கான சமூக நலச் சேவைகளை வழங்க ஆரம்பித்தது. வாய்ப்பற்றவர்களுக்கான பள்ளி இயக்கம் 1944 இல், ஷாஃப்டெஸ்புரி அறக்கட்டளையாக பெயர் மாற்றம் பெற்றது.

English

The educational and social development program started by Lord Shaftesbury in England in the 1850s to help educate poor children, who previously had little access to any schooling. The Ragged Schools provided schooling, social services, vocational development, and health care and were originally staffed by volunteers. Later, as education became more accessible to all British children, the role of these schools changed to focus on providing social services and assistance for children with disabilities and poor families. The Ragged School organization was renamed Shaftesbury Society in 1944.