rainbow coalition
வானவில் / பச்சைவில் / மனிதனு / மழைச்சிலை / கௌசிகாயுதம் / திருவில் கூட்டணி
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட அரசியல், சமூக நோக்கங்களை அடைய பல்வேறு இன, மத, அரசியல் சார்புள்ளவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிக் கொள்ளும் கூட்டணி. ஆனால் இந்தச் சொல்லாடல் பெரும்பாலும் கருப்பினச் சிறுத்தைகளால் ஆரம்பிக்கப்பட்ட (Black Panther) வான்வில் கூட்டணியும், ஜெஸ்ஸி ஜேக்சன் (Jesse Jackson) என்ற அமெரிக்கத் தலைவரால் உருவாக்கப்பாட்ட மானுடத்தைக் காக்க மக்கள் இயக்கம் (People United to Save Humanity) என்ற அமைப்பும் இணைந்த சேர்க்கையைக் குறிக்கும். வானவில் கூட்டணி என்பது பலநாடுகளிலும் பல்வேறு வகையான அரசியல், இன, மத நம்பிக்கைகளைக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படும் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களைக் குறிக்கும் சொல்லாடலாகப் பயன்படுகிறது.
English
A group of people from different racial backgrounds working together to achieve specific political or social goals.