Ramona decision

ரமோனா தீர்ப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சிகிச்சை முறையால், குறிப்பாக உளப்பிணி சிகிச்சை முறையால், நோயாளியைத் தவிர அவரைச் சார்ந்தவர் மறைமுகமாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அதற்கு உளப்பிணி சிகிச்சையாளரே பொறுப்பேற்க வேண்டுமென்ற கலிபோர்னியா நீதிமன்றத்தின் 1994 ஆம் ஆண்டுத் தீர்ப்பு. கேரி ரமோனா & ஸ்டெபாணி தம்பதியினரின் மகள், ஹோலி ரமோனா உண்ணுதல் கோளாறால் (eating disorder) பாதிக்கப்பட, அதற்கு உளச்சிகிச்சை பெற மார்ச்சி இசபெல்லா (marche isabella) என்ற உளப்பிணி சிகிச்சையாளரிடம் செல்கிறார். தன்னிடம் வரும் உண்ணுதல் கோளாறுடைய வாடிக்கையாளர்களில் கணிசமானவர்கள், தங்களின் குழந்தைப் பிராயத்தில் பாலியல் ரீதியான முறைகேடுகளுக்கு உள்ளானதால்தான் அவர்களிடம் உண்ணுதல் கோளாறுகள் உருவானதாக எடுத்துரைத்து, ஹோலி ரமோனா அதுமாதிரியான அனுபவத்தை எதிர்கொண்டதுண்டா என்று கேட்க, ஹோலி ரமோனாவின் நிச்சயமற்ற நினைவுகளை உறுதிப்படுத்த, அவருக்கு சோடியம் அமீடல் (sodium amytal) என்ற மருந்தைக் கொடுத்து அவரின் ஆழ்மன நினைவுகளை வெளிக்கொண்டுவந்த போது, அவருடைய தந்தையான கேரி ரமோனா தன்னைப் பாலியல் ரீதியாக அணுகியிருப்பாதாகச் சொல்ல, அந்த நினைவுகள் வலுப்பட்டு, கடைசியில் ஹோலி ரமோனா தன் தந்தை கேரி ரமோனாவின் மீது வழக்குத் தொடரும் நிலை ஏற்பட்டது. ஹோலியின் தந்தை கேரியின் வழக்கறிஞர்கள் sodium amytal தாக்கத்தினால் ஆழ்மன நினைவுகளை மீட்டெடுப்பது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படவில்லை என்று வாதாடி கேரிக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். தான் செய்யாத ஒரு செயலைச் செய்ததாக தன்னுடைய மகளிடம், பொய்யான நினைவுகளை உருவாக்கி, அதனால் தன்னுடைய குடும்ப வாழக்கை, தொழில், சமூக அந்தஸ்து மற்றும் மன நிம்மதியை உளப்பிணி சிகிச்சையாளர் சீரழித்து விட்டதாக, உளப்பிணி சிகிச்சையாளரான மார்ச்சி இசபெல்லா மீது வழக்குத் தொடுத்து, அதில் தனக்குச் சாதாகமான தீர்ப்பைப் பெற்றார். உளப்பிணி சிகிச்சையால் நோயாளிகளைத் தவிர மறைமுகமாக மூன்றாம் நபர்கள் பாதிக்கப்பட்டாலும் (எடுத்துக்காட்டாக உளப்பிணி சிகிச்சையாளரிடம் சிகிச்சைக்குச் சென்று வந்தபின் தம்பதியினரில் யாரேனும் ஒருவர் நியாமற்ற உளவியல் காரணங்களைச் சுட்டிக்காட்டி விவாகரத்து கோரும் பட்சம், அதனால் பாதிப்படைவதாக உளப்பிணி சிகிச்சையாளரின் மீது வழக்குத் தொடரும் நிலை) அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று வழிகாட்டிய முன்னோடி வழக்கு.

English

The 1994 judgment in a California court that psychotherapists may be held liable and sued by "indirect victims of the therapy." In the case, a father claimed his career and marriage were destroyed because his daughter's therapist convinced her that the father had sexually abused her. Some legal scholars believe such decisions will make therapists liable for the negative effects of the therapy on third parties, for example, a husband suing because his wife decides to divorce him as a result of therapy.