Rank and File Movement

மக்கள் இயக்கம், தொழிலாளர் இயக்கம்

தமிழ் விளக்கம்

இது பொதுவாக அமெரிக்காவில் தீவிர தொழிற்சங்க இயக்கச் செயல்பாடுகள் நிகழ்ந்த, 1925 - 1940 காலத்தைக் குறிக்கும். சமூகப்பணியைப் பொருத்த வரை, சமூகநலப் பணியாளர்கள் நல்ல வேலை நிலைமைகளுக்காகவும், அதிக ஊதியத்திற்காகவும், வேலைப்பளுவைக் குறைப்பதற்காகவும், பிறருடன், குறிப்பாக நலத்திட்டப் பயனாளிகளுடன் இணைந்து நலத்திட்டங்களை மேம்படுத்த முன்னெடுத்த போராட்டங்களைக் குறிக்கும். ஆரம்பத்தில் சமூகப்பணியாளர்கள் தங்கள் பணிச்சூழல் மேம்பட முன்னெடுத்த முயற்சிகள், பின்னர் சமூக மாற்றத்திற்கான முயற்சிகளாக மாறியது. இந்தக் காலகட்டத்தில் தான் பொதுவுடமைச் சித்தாந்தங்களோடு இணைந்த தீவிர சமூகப்பணிக் கருத்தாக்கங்கள் உருவாகியது. இதில் பெர்தா கேபென் ரெனால்ட்ஸ் (Bertha Capen Reynolds) போன்ற சமூகப்பணிக் கல்வியாளர்கள் முன்னோடிகளாகச் செயல்பட்டனர்.

English

A coalition of public welfare workers, social work unions, and welfare client groups that was active in the United States from 1925 to 1940. The movement began when welfare workers sought better working conditions, better pay, and more manageable caseloads, but grew into an activist movement to bring about massive social change. See also radical social work and Bertha Capen Reynolds Society (BCRS).