rape

கற்பழித்தல், வன்பாலுறவு, உரிமையின்றி பெண்ணின் இசைவு பெறா பாலுறவு, பாலியல் வல்லுறவு, வன்புணர்ச்சி, வலுப்புணர்ச்சி, கட்டாய உடலுறவு, வன்கலவி

தமிழ் விளக்கம்

வன்கலவி அல்லது பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்கொடுமை (Rape) என்பது ஒருவர் இன்னொருவரை அவரது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி பாலுறவிற்கு உட்படுத்தும் வன்முறையாகும். பாலியல் வன்முறைகளில் வன்கலவியே மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. வன்கலவி தொடர்பான சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சில நாடுகள் எல்லாவகையான பாலியல் வன்முறையையும் வன்கலவி என வரையறுக்கின்றன. பெரும்பாலும் பெண்களே வன்கலவிக்கு உட்படுத்தப்படுபவர்களாக உள்ளனர். ஆண் - ஆண் வன்கலவியும் நடைபெறுவதுண்டு. பொதுவாக உலக அளவில் ஆண்களே பாலியியல் வல்லுறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு, உத்தரப் பிரதேசக் குழு வன்புணர்வு, சூரியநெல்லி வன்புணர்வு வழக்கு, வாச்சாத்தி வன்முறை போன்ற வழக்குகள் இந்தியாவை உலுக்கிய வன்கலவி வழக்குகளாகும்.

English

The crime of forcing a nonconsenting person to engage in some form of sexual contact usually involving penetration. The force may take the form of violent assault or real or implied threat. The victim most frequently is a woman or girl but may be a man or a boy, and the perpetrator is almost always a man. See also acquaintance rape, statutory rape, and sexual assault.