rape crisis center

கற்பழிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள், பாலியல் வன்கொடுமைக்குள்ளானவர்களுக்கான உதவி மையங்கள்

தமிழ் விளக்கம்

பாலியல் வன்கொடுமைக்குள்ளானவர்களுக்கும், வன்கொடுமைக்குள்ளாகும் வாய்ப்புள்ளவர்களுக்கும், பாலியல் வன்கொடுமையைத் தடுக்கவும், அதன் விளைவுகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வசதிகள். இந்த மையங்கள் பெரும்பாலும் இலாப நோக்கின்றி செயல்படும் சேவை நிறுவனங்களாகவோ, மருத்துவ மையங்களாகவோ அல்லது காவல் துறையுடன் இணைந்த வசதிகளாகவோ இருக்கும். இந்த மையங்கள் திறத்தொழிலினாராலும், பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாயும், அதிர்ச்சியிலிருந்து மீள ஆலோசனை வழங்கியும், அவசரகால மருத்துவ உதவி போன்ற சேவைகளையும் செய்கிறது.

English

Organizations and facilities to help victims of sexual assault and educate potential victims and the public about the problem and its prevention. Many centers are nonprofit and work with health care facilities, social agencies, and police departments. They are usually staffed by a core of professionals and a large group of trained volunteers. These programs also assist and support the victim's partners and families as well and usually provide emergency hot-line services, preventive educational programs, and outreach services to the public.