rape trauma syndrome

கற்பழிப்பிற்குப் பின்னான மனஅழுத்தச் சீர்கேடு, கற்பழிப்பைத் தொடர்ந்த உளவழுத்தக் கோளாறு

தமிழ் விளக்கம்

மனிதர்களுக்கு மன அழுத்ததைத் தரும் தாம்பத்தியப் பிரச்சனைகள், மரணம், நோய் போன்றவை அதிர்ச்சியான சம்பவங்களாகப் பொதுவாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வழக்கமான மனித அனுபவங்களைக் கடந்து, அசாதாரண நிகழ்வுகளால் ஏற்படும், எடுத்துக்காட்டாக கற்பழிப்பு, போன்ற நிகழ்ச்சிகளை மன அழுத்ததைத் தரும் அசாதாரணமான நிகழ்வுகள் எனலாம். அதிர்ச்சிக்குரிய சம்பவங்களை எதிர்கொண்டவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமை, உணர்வு மழுங்கல், சுரணை இழத்தல், அதீத எச்சரிக்கை உணர்வு, மிரட்சி, துயர் தரும் நினைவுகள், தூக்கத் தொந்தரவுகள், பயங்கரக் கனவுகள் போன்றவை அதிர்ச்சிக்குப் பின்னான விளைவுகளாக அனுபவிப்பார்கள். தன்னைக் கற்பழித்தவர் மீதும் சமூகத்தின் மீது ஏற்படும் ஆத்திரத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அவர்களுக்கு உதவி தேவைப்படும்.

English

A specific type of posttraumatic stress disorder (PTSD) following sexual assault victimization. Many victims experience, at first, a sense of shock and numbness, followed by some superficial adjustment, and after several weeks, an increased sense of emotional distress includ- ing terror, startle response, insomnia, fits of crying, and fear of others. Then, after a phase of anger at the assailant and society, the victim may adjust to the experience and become a survivor rather than a victim.