rapport

உள ஒன்றிப்பு, உளத்தொடர்பு, மனத்தொடர்பு, நல்லெண்ணம்

தமிழ் விளக்கம்

Rapport என்ற சொல் பொதுவாக இருவரிடமோ, இரண்டிற்கும் மேற்பட்டவர்களிடமோ காணப்படும் இணக்கமான நல்லுறவைக் குறித்தாலும், இது தொழில்முறை உறவுகளில் (மருத்துவர் / நோயாளி, ஆசிரியர் / மாணவர்) பொருட்செறிவோடு பயன்படுத்தப்படும் சொல்லாடல். இதை, சமூகப்பணியில், ஒரு சமூகப்பணியாளருக்கும் வாடிக்கையாளருக்குமிடையே ஏற்படுகின்ற இனத்துயர்மையின் (empathy) அடிப்படையில், பரஸ்பரப் புரிதலோடு உருவாகின்ற, பயன் சார்ந்த தொழில் முறையிலான உறவு எனக் குறிப்பிடலாம்.. இந்த உளஒன்றிப்பு ஏற்படும் போதுதான் வாடிக்கையாளர் தன்னுடைய பிரச்சனைகளை ஒளிவு மறைவின்றி சமூகப்பணியாளருடன் பகிர்ந்து கொள்வார். சமூகப்பணியாளர் சொல்லும் ஆலோசனைகளுக்கு செவிமடுப்பார். இந்த உளஒன்றிப்பு, சிகிச்சை மற்றும் தீர்வுகளை விரைவுபடுத்த உதவுகிறது.

English

In the social work interview, the state of harmony, compatibility, and empathy that permits mutual understanding and a working relationship between the client and the social worker.