rapprochement

மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்க நிலை ஏற்படுதல், இருவருக்கிடையில் (அ) இரு கட்சிகளுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுதல், நல்லிணக்கம், அதிகரித்த புரிதல்கள், சமாதான நிலைப்பாடு

தமிழ் விளக்கம்

நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டாலும், மனநலம் மற்றும் சமூகப்பணியில் மார்கரெட் மாலர் (Margaret Mahler) என்ற மனநல மருத்துவரால் பிரேரிக்கப்பட்ட மனித வளர்ச்சி நிலைகளில், குறிப்பாக குழந்தைப் பருவ நிலைகளில் ஒன்று. மார்கரெட் மாலர் குழந்தைப் பருவங்களை இயல்பான தன்மையப் பருவம் (Normal autistic phase -First few weeks of life), இயல்பான இணைவாழ்வுப் பருவம் (Normal symbiotic phase - Lasts until about 5 months of age), தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும் (separation-individuation) என்று பிரித்தார். இதில் தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலுமான பருவத்தில் தாயின் மடியில் இருந்துகொண்டே வெளிஉலகைப் பார்க்கும் குஞ்சு பொரிக்கும் நிலை (Hatching), தாயிடமிருந்து விலகித் தவழ்ந்து நடைபயிலும் பருவம் (Practicing - 9-about 16 months), தாயை விட்டு விலகியும், தாயின் கண்காணிப்பிற்குட்பட்டு வெளி உலகை அணுகும் மறுசீரனைவுப் பருவம் (Rapprochement – 15–24 months - விடுதலை மற்றும் கண்காணிப்பை சமமாக விரும்பும் சமரச நிலை) என்று பிரித்தறிந்தார். இந்தப் பருவத்தில் ஏற்படும் மன நிலைப்பாடுகளும் (fixation), மனமுரண்பாடுகளும் பிற்காலத்தில் தற்பூசனையாளர்களாகவோ (narcissistic) அல்லது எதுவென்று தீர்மானிக்க இயலா நிலை, இயல்பான குறிதெரியா நோய்க்குறியுள்ளவர்களாகவோ (borderline disturbances) ஆக்கிவிடும் என்று மார்கரெட் மாலர் அறிந்தார்.

English

The fourth subphase in the separation-individuation process of human development proposed by Margaret Mahler, which lasts from about the age of one month to two years. If fixation or deviation occurs during this phase, according to Mahler, it is likely to lead to borderline or narcissistic disturbances in later life.