rational-emotive therapy

நியாய

தமிழ் விளக்கம்

உணர்வெழுச்சி சிகிச்சை, உளஎழுச்சிமிகையை பகுத்தறிவால் பண்படுத்தல் - மனிதர்கள் பொறுப்பாக இன்பித்திருப்பதை (responsible hedonism) இயல்பாகக் கொண்டிருந்தாலும், அந்த இயல்பான வாழக்கையை வாழமுடியாதவாறு அவர்களைத் தடுப்பது அவர்கள் உள்வாங்கிக்கொண்ட பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் சூழ்நிலையையும் பற்றி அவர்கள் உருவாக்கிக்கொண்ட எதிர்மறையான, தவறான, குறுகிய உணர்வுகளுமே என்ற கருத்தினடிப்படையில், ஆரோக்கியமற்ற உணர்வுகளை, சரியான பகுத்தறிவிற்குப் பொருத்தமான விளக்கங்களால் மாற்றியமைக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்த சிகிச்சை முறை. இதை உளவியலாளரும், உளப்பிணி சிகிச்சையாளருமான ஆல்பிரட் எல்லிஸ் என்பவர் பிரேரிபித்தார். இந்த சிகிச்சை முறையைப் பரவலாக்க ஒரு நிறுவனத்தையும் (உளஎழுச்சி மிகையை பகுத்தறிவால் பண்படுத்தும் சிகிச்சை நிறுவனம் - The Institute for Rational-Emotive Therapy 1968 ) தொடங்கினார்.

English

A psychotherapeutic method based on cognitive theory and the ideas of psychologist Albert Ellis, in which the client is encouraged to make distinctions between what is objective fact in the environment and the inaccurate, negative, and self-limiting interpretations made of one's own behavior and life. The Institute for Rational-Emotive Therapy, founded in 1968, is headquartered in New York.