rationalization

நியாயப்படுத்துகை, அறிவுக்குப் பொருத்தமாக விளக்குதல், அறிவார்ந்த விளக்கம், பொருந்துமுறை விளக்கச் செயல். சாக்குபோக்குச் சொல்லல், மன்னிப்புகேட்கும் பாவனை

தமிழ் விளக்கம்

1. ஒரு செயலை அறிவுக்குப் பொருத்தமாக விளக்குதல். 2. ஒருவகையான உளவியல் பாதுகாப்புப் பொறிமுறை (defense mechanism). இது பிராய்டின் உளவியற் பகுப்பாய்வுக் கொள்கையின்படி, ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் ஆகும். ஒருவர் வகிக்கும் சமூக நிலையை / ஸ்தானத்தைத் (status) தக்க வைத்துக் கொள்ள எதையும் மறுத்தல், உண்மையைத் திரித்தல், விளக்கங் கொடுத்தல், நியாயப்படுத்தல் போன்ற செயல்முறைகளைக் குறிக்கும். சர்ச்சைக்குரிய, கண்டிக்கத்தக்க நடத்தைகளை அல்லது உணர்வுகளை மற்றவர்கள் பொறுத்துக் கொண்டு பெரிது படுத்தாமல் விட்டுவிடும் அளவிற்கு அதற்கு நியாயமான விளக்கங்களை (சாக்கு போக்கு சொல்லல்) அளித்து, தற்காலிகமாகக் கண்டிப்பு, தண்டனை அல்லது ஏளனத்திலிருந்து மீள கையாளப்படும் உளவியல் அணுகுமுறை.

English

1. Presenting in logical terms, or interpreting the reasons for, some action or event. 2. A defense mechanism in which a person explains or justifies an action or thought to make it acceptable when it is unacceptable at a deeper psychological level.