raw score

ஒழுங்குபடுத்தப்படாத தரவுகள்

தமிழ் விளக்கம்

ஒரு ஆய்வில் சேகரிக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத, தொகுக்கப்படாத, வரிசைப்படுத்தாத தகவல்கள். எடுத்துக்காட்டாக ஒரு தேர்வில் மாணவர் 85 மதிப்பெண்கள் பெற்றதாகத் தெரிவிப்பது ஒழுங்குபடுத்தப்படாத தரவு. அதை 85/100 என்று சதவீதக்கணக்கில் சொல்வது ஒரளவு ஒழுங்குபடுத்தப்பட்ட தரவு. 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த நான்கு மாணவர்களில் இவரும் ஒருவர் என்று குறிப்பது தரவுகளை மேலும் ஒழுங்குபடுத்துவதாகும்.

English

In research, the original and unprocessed quantitative result of a test. For example, a student's raw score on a test of 25 items would be the number of items answered correctly. See also scaled score.