RDA

பரிந்துரைக்கப்பட்ட உணவு முறை

தமிழ் விளக்கம்

உணவு என்பது உடலுக்கும் அதன்மூலம் உயிர் வாழ்வதற்குமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உடலுக்கும், அதன்மூலம் உயிரணுக்களுக்கும் வழங்குவதாகும். உணவு என்பது பல ஊட்டக்கூறுகளை (Nutrients) உள்ளடக்கியது. அந்த ஊட்டக்கூறுகளின் தேவை மனிதர்களின் வயது, பாலியல் மற்றும் செய்யும் வேலையின் தன்மைக்கேற்ப வேறுபடும். இதில் மனிதர்களின் மரபுத்தன்மை, சுற்றுச்சூழல் காரணிகளும் மறைமுகமாகப் பங்கு வகிக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டு, வயதிற்கேற்ற மாதிரி, செய்யும் வேலையின் தன்மைக்கேற்ற மாதிரி, பாலினத்திற்கேற்ற மாதிரி, தட்பவெட்ப சூழலுக்குக்கேற்ற மாதிரி எந்த மாதிரியான உணவு வகைகளும், உணவின் அளவும் தேவைப்படும் என்று பரிந்துரை செய்வதே பரிந்துரைக்கப்பட்ட உணவு முறை ஆகும். பரிந்துரைக்கப்பட்ட உணவு முறையில் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து ஊட்டச் சத்தும் இருக்கும். பரிந்துரைக்கப்பட்ட உணவு முறை என்பது தனி மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவுவதோடு மட்டுமல்ல, ஒரு அரசு தன் மக்களுடைய உணவுத் தேவைகளைக் கணிக்கவும், அதற்கேற்றார் போல் உணவு உற்பத்தி மற்றும் விநியோக முறையைத் திட்டமிடவும் உதவுகிறது.

English

Recommended dietary allowance, the amount of nutrients needed every day to maintain optimal health. The U.S. Food and Drug Administration (FDA) requires that packaged food items be labeled as to the percentage of RDA per serving.