reaching out

சென்றடைதல்

தமிழ் விளக்கம்

எதிலும் அச்சம் கொண்ட, சந்தேக மனப்பான்மையுடனிருக்கின்ற, ஊக்கமிழந்த, பாராமுகமாக இருக்கின்ற வாடிக்கையாளர்களையும், சமுதாயங்களையும் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க சமூகப்பணியாளர் செய்யும் முயற்சிகளை கவித்துவமாக வெளிப்படுத்தும் சொல்லாடல். வாடிக்கையாளருடன் தேநீர் அருந்துதலும், வாடிக்கையாளருக்கு உதவக் கடமைப்பட்ட நிறுவனம் விதிமுறைகளைக் காட்டி உதவியைத் தாமதப்படுத்தும் போது அதில் தலையிட்டு உதவி கிடைக்க உதவுவதும், வாடிக்கையாளரின் பிரச்சனை தொடர்பாக அவர் எதிரிலேயே சமந்தப்பட்டவர்களுடன் தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் செயல்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற உதவி, அவரைச் சென்றடைய உதவி, அவரை மாறுதலுக்குத் தயார்படுத்தும். எந்த ஒரு சேவையும் வாடிக்கையாளருக்கு அருகாமையில், அணுக்கத்தக்க நிலையில் இருப்பதாக உணரவைப்பதும் சென்றடைவதற்கு எடுத்துக்காட்டாகும்.

English

Activities by the social worker to gain the trust or motivation of fearful, unmotivated, or hard-to-reach clients. Such activities might include tangible gifts (a cup of coffee or a piece of candy), concrete services (cutting through some red tape with another agency), or special favors (extending the length of a session, telephoning the client between meetings, and so on). Reaching out also includes making services known and more accessible to people in need.