reaction formation

எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம்

தமிழ் விளக்கம்

மற்றவர்களால் தவறென்று கண்டிக்கப்படலாம் அல்லது இகழப்பாடலாம் என்று கருதக்கூடிய உணர்வுகளையோ அல்லது தூண்டல்களையோ வெளிப்படுத்த முடியாத போது ஆதற்கு நேர்மாறான உணர்ச்சிகளை வெளியீட்டு, பதட்டதிலிருந்தும், தர்மசங்கடத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் உளப்பாதுகாப்பு பொறிமுறையைக் குறிக்கும் சொல். இது மனநலத்தைப் பாதிக்கக்கூடிய ஆரோக்கியமற்ற உளப்பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்று. எடுத்துக்காட்டு - ஒரு பணியாளர் தன்னால் வெறுக்கப்படும் மேலதிகாரியிடம் பணிவாக நடந்துகொள்வதும், அவரின் குணநலன்களை மிகைப்படுத்திப் பாராட்டுவதும், பணியாளர் தண்டனையிலிருந்தும், பதட்டத்திலிருந்தும் தன்னைப் பாதுகாக்கக் கையாளும் உளப்பாதுகாப்பு பொறிமுறையாகும்.

English

A defense mechanism in which the person behaves or thinks in ways or assumes values that are the opposite of the original unconscious trait. Thus, a social worker who has an unconscious dislike for children might specialize in working with them, advocating more stringent legal measures against child abuse.