reactionary
வலதுசாரி, பழமைவாதி, பிற்போக்குவாதி, மாற்றத்தை விரும்பாதவர்
தமிழ் விளக்கம்
பிற்போக்காளர்கள் அல்லது வலது சாரிகள் (reactionaries, rightist) என்பவர்கள் பாரம்பரியக் கொள்களைகளை முன்னெடுப்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் புதிய குடிவரவாளர்களை எதிர்ப்பார்கள், கருக்கலைப்பை எதிர்ப்பார்கள், அந்நிய முதலீடுகளைத் தடுப்பார்கள். பொதுவாக, சமய குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளை இகழ்ச்சியாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாடல். ஆனால் வலதுசாரி என்பதன் உண்மையான விளக்கம் பிரஞ்சுப் புரட்சியின் பொழுது, முடியாட்சிக்கும், அரசுக்கும் ஆதரவான உயர்குல பிரபுக்கள் மற்றும் கிருத்துவ திருச்சபை சார்புடையவர்கள், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் வலது பக்க இருக்கைகளில் அமர இடம் ஒதுக்கப்பட்டதிலிருந்து இச்சொல்லாடல் பிறந்தது. ஆனால், அது காலப்போக்கில் இனவாதம், குறுந்தேசியவாதம், குடிவரவாளர் எதிர்ப்பு, சர்வதிகாரம், பழமைவாதம் போன்ற கொள்கைகளைக் குறிக்கவும், பாசிசம், நாசிசம், வெள்ளையின ஆதிக்கம் போன்ற நடைமுறைகளை ஆதரிப்பவர்களுடன் தொடர்பு படுத்தப்பட்டது. இதற்கு மாறாக, இடதுசாரிகள் சமத்துவம், பொதுவுடைமைக் கொள்களைகளை முன்னெடுப்பார்கள் என்ற கருத்து நிலவுகிறது. முதலாளித்துவ நாடுகளில் பொதுவாக உள்ள கட்சிகள் எல்லாமே வலதுசாரிக் கொள்கையையே அதிகளவில் கடைப்பிடித்து வந்தன. மாறி வரும் உலகில் புதிய சிந்தனைகளுக்கு வழிகோலி இடதுசாரிக் கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள இரு கட்சி ஆட்சியில், ஜனநாயகக் கட்சி ஓரளவிற்கு இடதுசாரித் தன்மையுடனும், குடியரசுக்கட்சி வலதுசாரித் தன்மையுடனும் செயல்படுகின்றன. ஆனால் இரண்டுமே சீனாவுடன் ஒப்பிடும்பொழுது வலதுசாரித் தன்மைகொண்ட கட்சிகள். இடதுசாரிக் கொள்கைகள் முழுக்க முழுக்க திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுபவை. ஆனால், சோவியத் ஒன்றியத்தின் பிரிவினைக்குப் பின்னர் அவ்வாறான நாடுகள் இன்று அநேகமாக இல்லை. சீனா, கியூபா, வட கொரியா போன்ற இடது சாரி நாடுகள் கூட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியுள்ளன. ஆகவே இன்று நாடுகள் என்ற ரீதியில் இல்லாமல் கொள்கைகள் அடிப்படையிலேயே வலதுசாரி / இடதுசாரி என பார்க்கப்படுகின்றன.
English
A term of derision applied to an activist or an ideologue who opposes all forms of social change except those that go back to some former, idealized system.