reactive alcoholism

தூண்டப்பட்ட மதுப்பழக்கம்

தமிழ் விளக்கம்

மது அருந்துதலில் பலவகையுண்டு. அதைக் கவலைகளை மறக்க மது அருந்துதல் அல்லது ஒரு தூண்டலினால் மது அருந்துவது (reactive alcoholism), தொடர்ச்சியாக ஆனால் அளவறிந்து மது அருந்துவது (secondary alcoholism), மதுச் சார்பு நிலை (primary alcoholism) என்று மூவகைப்படுத்துவர். இதில் தூண்டப்பட்ட மதுப்பழக்கம் என்பது ஒருவர் பதட்டத்திலிருந்து விடுபடவோ அல்லது இழப்பு தந்த (நெருங்கியவர்களின் மரணம், தொழிலில் ஏற்படும் நஷ்டம் அல்லது வேலை இழப்பு) துக்கத்திலிருந்து மீளவோ மது ஆருந்தத் தொடங்குவதாகும். இவர்கள் அதற்கு முன்னர் மதுப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்க மாட்டார்கள். தூண்டலினால் ஏற்படும் மதுப்பழக்கம், அந்தத் தூண்டல் முடிந்த பின்பு நின்றுபோகவோ அல்லது அதுவே பழக்கமாகிப் போகவோ சமவாய்ப்புகள் உள்ளது.

English

One of the three major types of alcoholism (the other two being primary alcoholism and secondary alcoholism) characterized by heavy or excessive drinking that starts soon after experiencing a perceived crisis such as the death of a loved one, surviving an accident, or crime victimization. No prior indication of a drinking problem is noted, but after the traumatic event, the individual may or may not become and remain addicted to alcohol. See also posttraumatic stress disorder (PTSD).