reactive attachment disorder

பிணைப்பால் உருவான எதிர்வினைக் கோளாறு, ஈடுபாட்டால் உருவான எதிர்வினைக் கோளாறு

தமிழ் விளக்கம்

ஆரோக்கியமற்ற குழந்தை வளர்ப்பு முறைகளால், குழந்தைகளின் உணர்வுகள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டாலோ, குழந்தைகளைப் பராமரிப்பவர் அடிக்கடி மாறி, குழந்தையால் யாரிடமும் நிரந்தரப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் போகும் போதோ, அதற்கு எதிர்வினையாக உருவாகும் உளக் கோளாறு. இதனால் குழந்தைகள் தங்களின் வயதிற்கேற்ப பொருத்தமான வளரனுபவங்களை அனுபவிக்க இயலாமையால், அவர்களால் சமூக உறவுகளை இயல்பாகத் தொடங்கவோ அல்லது மறுவினையாற்றவோ இயலாமல், அவர்களின் சமூக வளர்ச்சி தடைபடலாம். இந்த அனுபவத்திற்கு (பிணைப்பு தன்மை) உள்ளான குழந்தைகள், வளர்ந்த பிறகு, அவர்களின் உணர்வுகள் தேவையற்ற குழந்தைப்பருவ அனுபவத்தால் தடுக்கப்படுவதால், அவர்கள் சீரற்ற, முறையற்ற கூடிப்பழகும் (sociability) போக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

English

A disorder of infancy or early childhood characterized by the age-appropriate failure to initiate or respond to social interaction, thought to be related to pathogenic care (that is, persistent disregard of the child's emotional or physical needs or repeated changes of primary caregiver that prevent formation of stable attachments). The child may manifest this disorder through excessively inhibited responses or by indiscriminate sociability.