reality principle

நிகழ்வர நெகிழ்நெறி, எதார்த்தம் உணர்தல்

தமிழ் விளக்கம்

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் சூழலின் எதிர்பார்ப்புகளால், தனது விருப்பங்களையெல்லாம் நினைத்த மாத்திரம் அடையமுடியாதென்பதையும், எல்லாத் தூண்டல்களுக்கும் தன்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாதென்பதையும் ஒரு குழந்தை உணர்ந்துகொள்ளும் நிலை. இன்ப நுகர்வை அடிப்படையாகக் கொண்ட உள்மனத் தூண்டல்களையும், சுற்றுச் சூழல் உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும், சமரசம் செய்யும் முறையை அல்லது திறனை, தன்முனைப்பு அல்லது அகமனம் புரிந்துகொள்ளும் தருணம்.

English

An idea in Freudian theory stating that the young child soon learns that the satisfaction of immediate impulses must be reconciled with the often competing demands of the environment. Thus, the ego finds ways to compromise between the demands of the environment and the internal drives that are related to the pleasure principle.