recertification
மறு சான்றளிப்பு
தமிழ் விளக்கம்
ஒருமுறை சான்றளிப்புத் தகுதியை பூர்த்தி செய்து சான்றளிப்பு பெற்ற திறத்தொழிலினர் (professional), அவர்களின் தொழில் திறன்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருவதை நிரூபிக்கும் முகமாக வழங்கப்படும் மறு சான்றளிப்பு அல்லது தொடர் சான்றளிப்பு முறை. மறு சான்றளிப்பு முறை திறத்தொழில்களில் தர உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதமளிக்கும். இது தொடர் கல்வியின் மூலமும், குறிப்பிட்ட மணிநேரம் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலமும், சரியினையான தொழில் சகாககளின் மதிப்பீடு மூலமாகவும் வழங்கப்படும்.
பார்க்க: continuing education - தொடர் கல்வி - சமூகப்பணி போன்ற சிறப்புத் திறன் (professional) தேவைப்படும் துறைகளில் (மருத்துவம், சட்டம் இன்னபிற), அத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் அடிப்படைக் கல்வியைத் தொடர்ந்து, அத்துறை சார்ந்த வளர்ச்சியை அறிந்துகொள்ள, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் துறை சார்ந்த அறிவைப் புதுப்பித்துக்கொள்ள கூடுதல் பயிற்சிகளைப் பெறவேண்டும். தொழில் சார்ந்த உரிமத்தைப் புதுப்பிக்க விரும்புபவர்கள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலம் தொடர் கல்வி பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டுமென்று, உரிமம் வழங்க சட்டப்படி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் விதிமுறைகளை வகுத்துள்ளன.
CEU (Continuing education units) - தொடர் கல்விக்கான மையங்கள் - சிறப்புத் தொழிலினர் (professional) தங்கள் துறை சார்ந்த நடைமுறை ஞானத்தைப் பெறவேண்டி தொடர்ந்து பயிலவேண்டுமென்ற நிபந்தனையை சான்றளிக்கும், சான்றைப் புதுப்பிக்கும் தொழில் சம்மேளனங்களும், உரிமம் கொடுக்கும் நிறுவனங்களும் வற்புறுத்துகின்றன. உதாரணமாக அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனம் நடத்தும் மூன்று மணிநேரப் பணியரங்கில் சமூகப்பணியாளர் கலந்துகொள்ளும் போது, அது சான்று புதுப்பிப்பதற்கான தகுதிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.
grandparenting clause - மூத்தோர்கள் பிரிவு - ஒரு தொழிலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளும், தகுதிகளும் அந்தத் தொழிலை அதற்கு முன்னரே பல காலங்கள் செய்து வந்தவர்களுக்குப் பொருந்தாது என்று விலக்களித்த உத்தரவு. இதன்படி 1973 ஆம் ஆண்டிற்கு முன்பு அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராயிருந்து, குறிப்பிட்ட காலம் சமூகப்பணியாளர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், தகுதித் தேர்வு எழுதினால்தான் உறுப்பினராக முடியும் என்ற சங்கச் ஷரத்திலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.

English
The quality assurance measure in which experienced professionals are required to demonstrate that they have maintained their ability to provide competent services. Once the professional shows that the ability remains, a formal declaration that the requirements have been fulfilled is made. This is often done by compelling professionals to pass examinations at designated times during their careers, to take a specified number of qualified training and retraining programs or units of continuing education, or to demonstrate continued practice competence to peers. See also continuing education, CE Us, and grandparenting clause.