recession

பின்னடைவு, மந்தம், சரிவு, பின்னிடல், பின்னிறக்கம், சுணக்கம், பின்னேற்றம் (recession in the industry தொழிலில் மந்தம், தொழிலில் பின்னடைவு)

தமிழ் விளக்கம்

பொருளாதாரத்தில் மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து சில காலம் நிகழும் பொதுவானதொரு வேகக்குறைவு அல்லது வர்த்தகச் சுழற்சியில் தாழ்வுநிலை என்று வரையறுக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு, முதலீட்டுச் செலவினம், கொள்ளளவு உபயோகம், வீட்டு வருமானம், வியாபார லாபம் ஆகிய அனைத்தும் மந்தநிலையின் பொழுது பெருமளவில் வீழ்ச்சி அடைகின்றன. பொதுமக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் செலவுகளை / தேவைகளைக் குறைக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல்படும் பொழுது மந்த நிலை மேலும் அதிகரிக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு, பொதுவாக அரசுகள் பேரினப் பொருளியல் திட்டங்களை வகுக்கின்றது. பணப்புழக்கத்தை அதிகரிப்பது, வட்டிவிகிதங்களைக் குறைப்பது, அரசின் செலவீனங்களை அதிகரிப்பது, வரிகளைக் குறைப்பது போன்றவை அதில் அடங்கும். மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் மந்த நிலை நீடித்தால், அது நீண்ட மற்றும் கடுமையான மந்தநிலை அல்லது பொருளாதாரத் தாழ்வுநிலை (economic recession) எனப்படுகிறது.

English

A socioeconomic condition characterized by lowered business activity, higher unemployment, and reduced purchasing power. Recession is considered a milder or shorter version of economic depression. See also stagflation.