recidivism rate
மீண்டும் மீண்டும் குற்றம் புரிதல், மீண்டும் குற்றம் புரியத் தலைப்படும் தன்மை, நோய்மீளல், மீள் குற்றம் புரிபவர்கள், பழைய நிலைக்குத் திரும்புதல்
தமிழ் விளக்கம்
குற்றம் புரிந்து தண்டனை பெற்ற பிறகும் திரும்பக் குற்றமிழைத்து சிறைக்குச் செல்பவர்கள். இது மீள் குற்றம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நலம் பேணகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளியை மீண்டும் நோய் தொற்றிக் கொள்வதையும் குறிக்கும். ஒரு நிறுவனப் பராமரிப்பில் இருந்தவர்களில் எத்துணை பேர் மீண்டும் அதே காரணங்களுக்காக அந்த நிறுவனத்திற்குத் திரும்புகிறார்கள் என்பதையும் குறிக்கும். எடுத்துக்காட்டு போதை மீட்பு சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை நோய் மீளல் எனலாம்.
English
The number of people in a specified period who return to an institution relative to the population of that institution. For example, a mental hospital with a 50 percent annual recidivism rate would see half of its discharged patients return within a year.