reciprocal causality
ஏற்றெதிர் விளைவுகள், இணைக்கிணை விளைவுகள், பரஸ்பர விளைவுகள்
தமிழ் விளக்கம்
சூழியல் கண்ணோட்ட அடிப்படையில், சமூக உறவுகளுக்கும் சமூகப் பரிமாற்றங்களுக்குமான காரண காரியத் தொடர்புகள் என்பது நேர்க்கோட்டுப் பாதையில் செல்லாதெனவும், அது பெரும்பாலும் வட்ட வளையமாக ஒரு காரணத்திலிருந்து பிறக்கும் காரிய விளைவுகள், பிறிதொரு காரணத்தை உருவாக்கி, பிறிதொரு விளைவை உண்டாக்கும் என்ற இயங்கியல் விளைவைக் கூறும் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், தனிமனிதப் பிரச்சனைகளை, மனிதர்களின் ஆளுமைக் குறைபாடாகப் பார்க்காமல், அவர்களின் சுற்றுச் சூழல் பரிமாற்றங்களின் விளைவு என விளக்குகிறது.
English
A concept emphasized in the ecological perspective that views social interrelationships and transactions as occurring, not in a simple linear cause-effect outcome, but with circular feedback so that cause becomes effect and effect becomes cause all around the circular loop. In this view, the individual's problems are the consequence of people-environmental exchanges rather than the sole result of personality or environmental factors.