recording
பதிவிடல், ஆவணப்படுத்தல்
தமிழ் விளக்கம்
தான் செய்யும் பணியைப் பற்றி எழுத்து வடிவிலோ அல்லது மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தி பதிவிடுதல் அல்லது ஆவணப்படுத்தல் என்பது சமூகப்பணியாளரின் செயல்முறைகளில் முக்கியமானது. சமூகப்பணியில் பதிவிடல் என்பது, தன்னிடம் வரும் வாடிக்கையாளரைப் பற்றியும், தீர்வை இலக்காகக் கொண்ட பிரச்சனைகளைக் கையாளும் முறை பற்றியும் அடிப்படைத் தகவல்கள் கொண்டதாயும், பிரச்சனை உருவாவதற்கான சமூகப்பொருளாதார, தனிமனித காரண காரிய விளக்கங்கள், அதனடிப்படையில் சமூகப்பணியாளர் உருவாக்கிக் கொண்ட முன்கணிப்புகள் (prognosis), பிரச்சனையைத் தீர்க்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் (திட்டமிட்டு கையாண்ட தீர்வு முறைகள்) அந்த முயற்சிகள் செயல் வடிவம் பெற்றபோது கிடைத்த பலன்கள் அல்லது மாற்றம் போன்ற பல தகவல்களின் உள்ளடக்கத்தை அல்லது குறிப்புகளை சமூகப்பணியில் பதிவிடுதல் எனலாம். சமூகப்பணியாளரின் பணிநேரத்தைக் கணிசமாக எடுத்துக்கொள்ளும் இந்தச் செயல்முறையின் மூலமே சமூகப் பணியாளரின் பொறுப்புடமையும் (accountability) மற்றும் தொழில் திறனுடமையும் (professional effectiveness) மதிப்பிடப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், மாறிவரும் சட்டக் கடப்பாடுகளும் (தற்காப்பு பயிற்சி - defensive practice) சமூகப்பணியின் பதிவிடல் முறையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், வாடிக்கையாளரின் அந்தரங்கம் பற்றிய இரகசியக் காப்பு, பதிவிடும் முறை மற்றும் உள்ளடக்கம் (content & methodology) பற்றிய விசயங்களில் பின்பற்றப்படும் வேறுபாடுகளில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. பெரும்பாலான சமூகப்பணி மாணவர்களின் ஆவணப்படுத்தல் திறன் எதிர்பார்க்குமளவு செழுமையடையவில்லை என்ற ஆதங்கம் சமூகப்பணிக் கல்வியாளர்களிடம் இருக்கின்றது. சமூக சேவை நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து, சமூகப்பணியாளரின் சமூகப்பாங்கு பொறுத்து, எந்தமாதிரியான உதவிகள் முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து பலவிதமான பதிவிடல் முறைகள் சமூகப்பணியில் கையாளப்படுகின்றன. narrative summary என்ற சமூகப்பணி செய்முறை பற்றி வரிசைப்பட செறிவாக எடுத்துரைக்கும் செறிவான பதிவுகள், மானுடச் சூழல் கண்ணோட்டம் மற்றும் மானுடச் சுற்றாடல் தொகுப்பில் (Person-in-Environment [PIE] System) பயன்படுத்தும் குறியீடுகளைக் கொண்டு பதிவிடப்படும் psycho social assessment என்ற சமூக உளவியல் மதிப்பீடு, behavioural assessment என்ற ஒருவர் நடந்து கொள்ளும் விதத்தை நேரடியாகக் கவனித்து மதிப்பிடும் பதிவு முறை, லாரன்ஸ் வீட் என்ற மருத்துவரால் பிரேரிக்கப்பட்டு சமூகப்பணியாளர்களால் தங்கள் பணிக்கென மாற்றப்பட்டு கையாளப்படும் problem-oriented record (POR) என்ற பிரச்சனை குறித்த பதிவுக்குறிப்பு, verbatium recording என்ற அப்படிக்கப்படியே சொல்லுக்குச் சொல்லாகாக் குறிக்கப்பட்ட அறிக்கை, SOAP note (subjective, objective, assessment, and plan) எனப்படும் SOAP குறிப்பு (அகநிலை, புறநிலை, மதிப்பீடு, மற்றும் திட்டம் என்பதன் சுருக்கம்) பதிவு முறைகள் சமூகப்பணியில் பின்பற்றப்படும் சில பதிவிடல் முறைகளாகும்.
English
In social work, the process of putting in writing and keeping on file relevant information about the client; the problem; the prognosis; the intervention plan; the progress of treatment; the social, economic, and health factors that contribute to the situation; and the procedures for termination or referral. There are many types of recording, depending on the agency's requirements, the social worker's social style, and the type of intervention. These may include the narrative summary, the psychosocial assessment, the behavioral assessment, verbatim recording, the problem-oriented record (POR), and the SOAP charting method.