recovered memory
மீட்கப்பட்ட நினைவுகள்
தமிழ் விளக்கம்
அடக்கப்பட்டதாலோ அல்லது ஒடுக்கப்பட்டதாலோ நனவுநிலையிலிருந்து மறக்கப்பட்ட நினைவுகளை மீட்டெடுத்தல். வலிதரும் நினைவுகளை எதிர்கொண்டு கையாளாமல், அதை அடக்கி ஆழ்மனதில் சேர்த்துவைப்பது மனநலனுக்கு உகந்ததல்ல என்ற அனுமானத்தின் அடிப்படையில் மனோவசியம் அல்லது அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தியோ அல்லது அறிதுயில் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி நினைவுகளை மீட்டெடுக்கும் இந்த முறை ஐயப்பாட்டுடனே அணுகப்படுகிறது.
பார்க்க: Ramona Decision ரமோனா தீர்ப்பு - ஒரு சிகிச்சை முறையால், குறிப்பாக உளப்பிணி சிகிச்சை முறையால், நோயாளியைத் தவிர அவரைச் சார்ந்தவர் மறைமுகமாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அதற்கு உளப்பிணி சிகிச்சையாளரே பொறுப்பேற்கவேண்டுமென்ற கலிபோர்னியா நீதிமன்றத்தின் 1994 ஆம் ஆண்டுத் தீர்ப்பு. கேரி ரமோனா & ஸிடெபாணி தம்பதியினரின் மகள் ஹோலி ரமோனா உண்ணுதல் கோளாறால் (eating disorder) பாதிக்கப்பட, அதற்கு உளசிகிச்சை பெற மார்ச்சி இசபெல்லா (marche isabella) என்ற உளப்பிணி சிகிச்சையாளரிடம் செல்கிறார். தன்னிடம் வரும் உண்ணுதல் கோளாறுடைய வாடிக்கையாளர்களில் கணிசமானவர்கள், தங்களின் குழந்தைப் பிராயத்தில் பாலியல் ரீதியான முறைகேடுகளுக்கு உள்ளானதால்தான் அவர்களிடம் உண்ணுதல் கோளாறுகள் உருவானதாக எடுத்துரைத்து, ஹோலி ரமோனா அதுமாதிரியான அனுபவத்தை எதிர்கொண்டதுண்டா என்று கேட்க, ஹோலி ரமோனாவின் நிச்சயமற்ற நினைவுகளை உறுதிப்படுத்த அவருக்கு sodium amytal என்ற மருந்தைக்கொடுத்து அவரின் ஆழ்மன நினைவுகளை வெளிக்கொண்டுவந்த போது, அவருடைய தந்தையான கேரி ரமோனா தன்னை பாலியல் ரீதியாக அணுகியிருப்பாதாகச் சொல்ல, அந்த நினைவுகள் வலுப்பட்டு, கடைசியில் ஹோலி ரமோனா தன் தந்தை கேரி ரமோனாவின் மீது வழக்குத் தொடரும் நிலை ஏற்பட்டது. ஹோலியின் தந்தை கேரியின் வழக்கறிஞர்கள் sodium amytal தாக்கத்தினால் ஆழ்மன நினைவுகளை மீட்டெடுப்பது மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படவில்லை என்று வாதாடி கேரிக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். தான் செய்யாத ஒரு செயலைச் செய்ததாக தன்னுடைய மகளை நம்பவைத்து, அதனால் தன்னுடைய குடும்ப வாழக்கை, தொழில், சமூக அந்தஸ்து மற்றும் மன நிம்மதியை உளப்பிணி சிகிச்சையாளர் சீரழித்து விட்டதாக, உளப்பிணி சிகிச்சையாளரான மார்ச்சி இசபெல்லா மீது வழக்குத் தொடுத்து அதில் தனக்கு சாதாகமான தீர்ப்பை பெற்றார். உளப்பிணி சிகிச்சையால் நோயாளிகளைத் தவிர மறைமுகமாக மூன்றாம் நபர்கள் பாதிக்கப்பட்டாலும் (எடுத்துக்காட்டாக உளப்பிணி சிகிச்சையாளரிடம் சிகிச்சைக்குச் சென்று வந்தபின் எதிர்பாராத காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்பதியினரில் யாரேனும் ஒருவர் நியாமற்ற உளவியல் காரணங்களை சுட்டிக்காட்டி, விவாகரத்து கோரும் பட்சம் அதனால் பாதிப்படைவதாக உளப்பிணி சிகிச்சியயாளரின் மீது வழக்குத் தொடரும் நிலை) அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று வழிகாட்டிய முன்னோடி வழக்கு
false memory syndrome :நடக்காத ஒன்றை நடந்ததாக நினைத்து அதன் மீது செயலாற்றுதல், கற்பனையைக் கொண்டு எதார்த்தத்தை இட்டு நிரப்புதல் - நடக்காத செயல்கள் நடந்ததாக மிகத் துல்லியமாக, சந்தேகத்திற்கு இடமாளிக்காத அளவு நினைவு கூறும் கோளாறு. துயர் மிகுந்த வலிநிறைந்த சம்பவங்களை மறக்க நினைத்தாலும், அது நினைவுக்கு வரும்போது, அதை முற்றிலுமாகவோ அல்லது சிலபகுதிகளை திரித்தோ சொல்லும் கோளாறு. குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க கையாளும் மறதிக்கோளாறு.
implanted memory: (ஒருவரின் மனதினுள்) சிறிது சிறிதாகச் செலுத்தப்பட்ட நினைவுகள், பதிக்கப்பட்ட நினைவுகள், உட்பதித்தல், உட்பதிவு - இது அச்சம் அல்லது வலி அகற்றும் மருத்துவத்தில் கையாளப்படும் ஒரு உத்தி. நடக்காத ஒரு செயலை நடந்ததாக நினைவில் பதிய வைப்பது. இது நியாயமற்ற நடைமுறைதான் என்றாலும், கூடா ஒழுக்கம், கற்பழிப்பு, குழந்தைப் பருவ வன்கொடுமை போன்ற அடக்கி வைக்கப்பட்ட அதிர்ச்சியான நினைவுகளில் இருந்து மீள இது பயன்படுத்தப்படுகிறது

English
Retrieving parts of a client's forgotten past experiences that had been concealed from consciousness due to suppression or repression. See also memory recovery therapy, false-memory syndrome, and implanted memory.