recycle

மறுசுழற்சி

தமிழ் விளக்கம்

குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் இச்செயல் ஒரு சட்டப் பொறுப்பாக மாறியுள்ளது. மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்தத் தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களைப் புதிதாக உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் குறைக்கப்பட்டு செலவினங்கள் குறைக்கப்படுகின்றது. மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடங்கி நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் ஏற்படுகின்றன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு (sustainable) நிலையைக் கூட்டுகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகளும், தொழில்நுட்பமும் விரிவாகி வருகின்றது.

English

Preparing disposable items for reuse.