Red Crescent

செம்பிறைச் சங்கம் / இயக்கம்

தமிழ் விளக்கம்

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரளவில் வேறுபட்டாலும், அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. அரபுலக நாடுகளில் சிலுவை எனும் குறியீட்டுக்கும், வார்த்தைப் பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும், வார்த்தைப் பதமும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உலக நாடுகளில் 178 தேசியக் கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுதல் போன்றவையே இந்தச் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

English

Disaster relief and humanitarian organizations in Muslim nations, affiliated with the International Red Cross.