Red Cross
செஞ்சிலுவைச் சங்கம்
தமிழ் விளக்கம்
செஞ்சிலுவைச் சங்கம் ஒரு பன்னாட்டு மனிதாபிமான அமைப்பு. இவ்வியக்கத்தில்; நாடு, இனம், மதம், வகுப்பு, அரசியல் கருத்து என்பவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல், மனித உயிர்களையும், உடல் நலத்தையும் பாதுகாத்தல், மனிதர்களுக்கு மதிப்பு அளித்தலை உறுதிப்படுத்துதல், மனிதர்களின் துன்பங்களைத் தடுத்தலும் அவற்றை நீக்குதலும் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 97 மில்லியன் தன்னார்வலர்கள் உலகம் முழுதும் பணிபுரிகின்றனர். இவ்வியக்கம், பல தனித்தனியான அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றாகும். இவ்வமைப்புக்கள், பொது அடிப்படைக் கொள்கை, நோக்கம், சின்னம், சட்டவிதிகள், ஆட்சி உறுப்புக்கள் என்பவற்றால் ஒன்றிணைந்துள்ளன. இந்த அமைப்பு ஜெனீவாவைச் சேர்ந்த ஜீன் ஹென்றி டியூனாண்ட் (Jeane Henry Dunant) என்பவரால் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த மே 8 ந்தேதி செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. 1. மனிதாபிமானம் 2. பாரபட்சமின்மை 3. நடுநிலைமை 4. சுதந்திரத் தன்மை 5. தொண்டு புரிதல் 6. ஒற்றுமை 7. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை. பலநாடுகளில் செயல்படும் செஞ்சிலுவைச் சங்கங்கள் அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகிறது. இராணுவத்தில் செவிலியராகப் பணிபுரிந்த கிளார பர்ட்டன் (Clara Barton) என்ற அம்மையாரால் அமெரிக்காவில் செஞ்சிலுவைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. போரற்ற சமாதானக் காலங்களில் இயற்கைப் பேரிடர்கள், விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரத்ததானம், முதற்சிகிச்சை முதலுதவிக்கான பயிற்சி வழங்கல், நடமாடும் சுகாதார சேவை வழங்கல், விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை, உறையுள் என்பவற்றை வழங்கல். வறட்சி நிவாரணம், போன்ற சேவைகளில் ஈடுபடுவதும், அதற்கான பயிற்சிகளை வழங்வதும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய செயல்பாடுகளாகும்.
English
The international organization and federation of more than 100 autonomous national societies concerned with the alleviation of human suffering and the promotion of public health and civil rights. The organization was founded in Switzerland in 1863 by Jean Henri Dunant, and its emblem is based on the Swiss flag. The International Red Cross often acts as a neutral intermediary between nations at war or in conflict and works to ensure humane treatment of prisoners of war. The American Red Cross, founded in 1881 by Clara Barton (1821-1912), emphasizes disaster relief, social services to military personnel and veterans, health and safety programs, and the coordination of blood and organ donations to hospitals.