red tape
சிவப்பு நாடா
தமிழ் விளக்கம்
சிவப்பு நாடா என்பது எந்தமுடிவையும் விரைவாக எடுக்கமுடியாதவாறு வடிவமைக்கப்பட்ட நிர்வாக நடைமுறையைக் குறிக்கும் மரபுச் சொல். இது படிநிலை அதிகாரத்தைப் (bureaucratic hierarchy) பின்பற்றி, நடைமுறைக்குப் பொருத்தமில்லாத அதிகார விதிகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றி, நிர்வாக ஒப்புதல் பெரும் நடைமுறையைக் குறிக்கும். சிவப்பு நிறம் பல்வேறு பொருளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல். இது ஆபத்தான மனிதர்களைக் குறிக்கவும், விளையாட்டு மைதானத்தில் விதிமுறைகளை மீறியவருக்குக் காட்டவும் பயன்படுத்தப்படும் நிறம். சிவப்புக் கம்பளம் விரித்தல் இராஜ மரியாதையைக்குறிக்கும். சிவப்பு நாடாத் தொல்லை என்பது பணி, திட்டம், நிர்வாக முடிவுகள் போன்றவற்றைத் தாமதப்படுத்தும் அரசின் விதிமுறைகளைக் (Red Tape) குறிக்கும். சிவப்பு விளக்குப் பிராந்தியம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் உள்ள பகுதி. சிவப்பு விளக்கு ஆபத்தை அறிவிப்பது. போக்குவரத்தில் வாகனங்கள் நிற்க வேண்டியதை வலியுறுத்தும் நிறம். செஞ்சிலுவைச் சங்கத்தின் அடையாளம் வெள்ளைக் கொடியில் சிவப்புச் சிலுவை. மாமிசத்திலும் சிவப்பு மாமிசம் வெள்ளை மாமிசம் என்று இரு பிரிவு உண்டு. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றன சிவப்பு மாமிசத்தின் பட்டியலில் வருபவை. ஒருவர் குறைத்துச் சாப்பிட வேண்டிய மாமிசம். கோழி இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை வெள்ளை இறைச்சி ரகத்தைச் சார்ந்தவை. கையும் களவுமாக பிடிபட்டவனை, ஆங்கில மொழியில் Caught Red-handed என்றே சொல்வதுண்டு.
English
Bureaucratic procedures and rules.