redlining

சிவப்புக் கோடிடுதல்

தமிழ் விளக்கம்

சிவப்புக்கோடிடும் முறை என்பது, அமெரிக்க நகரங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடன் வழங்குவதும் அதைத் திரும்பப் பெருவதும் இலாபமற்றது மற்றும் ஆபத்தானது என்று அப்பகுதிகளை சிவப்புக் கோடால் அடையாளமிட்டு, அப்பகுதியிலிருந்து வீடு கட்டவோ, வீட்டைப் புதுப்பிக்கவோ வரும் கடன் விண்ணப்பங்களை நாசூக்காக மறுத்த அமெரிக்க நிதி நிறுவனங்களின் (வங்கிகளின்) நடைமுறை. சுருக்கமாக வசதியான, கடனை திருப்பிச் செலுத்த முடிந்தவர்களுக்கு வங்கிகள் கடனளிக்கும் முறை. மாறாக சம கடன் வாய்ப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, வங்கிகள் ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் கடன் கொடுக்க அரசால் வற்புறுத்தப்பட்டனர். அதற்கு இணங்காத வங்கிகளில் போடப்பட்டிருக்கும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெரும் போராட்டத்தை சமுதாயப் பணியாளர்கள் முன்னெடுத்து வங்கிகளின் நடைமுறையை ஏழைகளுக்கு அனுசரணையாக மாற்ற முயற்சி எடுத்தனர். இதுவே பச்சைக்கோடு நடைமுறை எனப்பட்டது.

English

The practice by certain financial institutions of designating an area of a city as being too risky and unprofitable to lend money to those who want to rebuild or refurbish buildings there. The term came from the red line that various institutions drew on maps around ghetto areas to identify those locales that would not be funded. The practice was made illegal with passage of the Community Reinvestment Act of 1977. See also greenlining.