referee

ஏட்டின் மதிப்பாய்வுரையாளர், விமர்சகர், திறனாய்வாளர், (ஆட்ட நடுவர், ஆட்டக்காரணிகர், நடுவர், முறையீடு நடுவர்)

தமிழ் விளக்கம்

நடுவர் எனப்படுபவர் விளையாட்டுப் போட்டிகளிலும், குற்றவியல் நடைமுறைகளிலும், எந்த அணியையும், கட்சியையும் சாராது நடுநிலையுடன் ஆட்ட விதிகளுக்குட்பட்டு அல்லது சாட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டவர். ஆனால் பதிப்புத் துறையில், ஆய்வுக் கட்டுரைகளையோ அல்லது துறை சார்ந்த புத்தகங்களையோ வெளியிடும் முன்னர், அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரால் அது வெளியிடுவதற்கு ஏற்ற தரத்தில் உள்ளதா என்று மதிப்பீடு செய்பவர். இந்தத் திறனாய்வாளரின் மதிப்பீட்டை ஒட்டியே ஒரு கட்டுரையோ அல்லது புத்தகமோ வெளியிடுவதற்குத் தகுதியானது என்று தீர்மானிக்கப்படுகிறது. சில வெளியீட்டாளர்கள், திறனாய்வின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, எழுதியவர் மற்றும் திறனாய்வாளர்களின் பின்ணனியை ரகசியமாக வைப்பதுமுண்டு.

English

A peer reviewer of some written material to help editors and publishers determine its suitability for publication. Publishers of serious scholarly journals, textbooks, and other professional documents usually ask several of the author's professional colleagues, usually those with some expertise in the topic discussed in the proposal or submitted manuscript, to evaluate the material. The publisher commonly uses the double blind process to help ensure that the decision to publish or not to publish is based only on the merits of the writing. Reputable social work journals and textbooks, as well as those of other professional groups, use referees to determine if the material should be published.