reference group

ஒப்பீட்டுக் குழு, அடையாளக்குழு

தமிழ் விளக்கம்

தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் கருத்துக்கள், நம்பிக்கைகள், மனோபாவங்கள் மற்றும் நடத்தைகள் மீது செல்வாக்கு செலுத்தும் அல்லது முன்னுதாரணமாக கருதப்படும் தனிமனிதர்கள் மற்றும் குழுக்களை ஒப்பீட்டுக்குழுக்கள், அடையாளக் குழுக்கள் எனலாம். இதில் அடையாளக் குழுக்கள் என்பன (normative reference group) ஒழுங்குமுறை சார்ந்த முன்னுதாரணர்கள். எ.கா பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள். ஒப்பீட்டுக்குழுக்கள் (comparative reference groups) என்பன பிறரின் தரத்தோடு ஒப்பீடு செய்துகொள்ள உதவும் குழுக்கள்.

English

A social status, culture, subculture, or association of any type whose behaviors, values, and lifestyles are emulated by an individual. The person may or may not be a member of the group with which he or she is identifying.